
அரியலூரை சேர்ந்த 12ம் வகுப்பு படித்த பள்ளி மாணவி ஒருவர் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரவளி பிரியா மறுப்பு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்தியதில் அவர் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியது தெரியவில்லை என்றார்.
இவரது கருத்து இந்துக்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இவரது கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இயக்குநர் மோகன் ஜி, தனது ட்விட்டர் பதிவில் எஸ்.பி. ரவளி பிரியா பேசியது குறித்து ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் வீடியோல பேசியது லாவண்யாவே இல்லை போல.. என்னங்க சார் உங்க சட்டம் என குறிப்பிட்டுள்ளார்.
பெண்ணுக்காக குரல் கொடுப்போம் எனக் கூறித் திரியும் முற்போக்கு பெண்ணியவாதிகள் வாய் மூடி இருப்பது அவர்களின் அரசியல் ஆதாயத்தையும் மத அரசியல் செய்து, பிச்சை வாங்கிய ஓட்டுக்கு வாய்மூடி இருப்பதும் வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது மெழுகுவர்த்திக்கு எதிராக எங்கிருந்து மெழுகுவர்த்தி தூக்க… என்று வாளா இருப்பார்கள்… என நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது. ஜால்ரா ஊடகங்களின் துணையோடு உண்மையை பொய்யாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.