
சிறுமி தனது தாய் – தந்தையுடன் ரெஸ்டாரண்டுக்கு சென்று சாப்பிட்டு கொண்டு இருந்த நிலையில், உருளைக்கிழங்கு சிப்ஸை தந்தை சாஸில் தொட்டு, மகளுக்கு ஊட்டுவது போன்று சென்று அவர் சாப்பிட்டு இருக்கிறார்.
இரண்டு முறை ஆவலுடன் சிப்ஸை எதிர்பார்த்த குழந்தை ஏமாற்றமடைந்த நிலையில், உருளைக்கிழங்கு சிப்ஸை எடுத்து தனது பெற்றோருக்கு சிறிது சிறிதாக பங்கிட்டு கொடுக்கிறது. பின்னர், சிப்ஸ் காலியாகும் நேரத்தில், விரைந்து செயல்பட்டு சாஸை தொட்டு சிறுமி சாப்பிடுகிறார்.
செல்லக்குழந்தையின் சுட்டித்தனம் மற்றும் சுதாரிப்பான நடவடிக்கை குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. கியூட் குழந்தையின் அறிவாளித்தனமான செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
https://www.instagram.com/reel/CYaVKSSqblP/?utm_source=ig_embed&utm_campaign=loading