வாடிக்கையாளருக்கு எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பு!

sbi - 2026

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி (SBI) வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான செய்தி அறிவித்து உள்ளது.

பிப்ரவரி 1 முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான டிஜிட்டல் உடனடி கட்டணச் சேவை (IMPS) பரிவர்த்தனைகளுக்கு பயனர்கள் சேவைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கியின் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் யோனோ வசதிகளைப் பயன்படுத்தி 5 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு IMPS அம்சத்தை இலவசமாகப் பயன்படுத்தலாம்.

முன்னதாக, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை ஆன்லைனில் செய்ய அனுமதித்தது. ஆனால், எஸ்பிஐ தற்போது இந்த வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.

இருப்பினும், IMPS பரிவர்த்தனைக்காக ஒரு வாடிக்கையாளர் எஸ்பிஐ கிளைக்குச் சென்றால், தனிநபர் IPMS கட்டணத்தை ஏற்கனவே உள்ள அடுக்குகளில் செலுத்த வேண்டும்.

தற்போது, ​​ரூ. 1,000 அல்லது அதற்கும் குறைவான மதிப்புள்ள ஆஃப்லைன் IMPS பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை, அதே சமயம் ரூ. 1,000 மற்றும் ரூ. 10,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.2 சேவைக் கட்டணம் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.

அதேபோல், ரூ. 10,000க்கு மேல் மற்றும் ரூ. 1,00,000 வரையிலான ஆஃப்லைன் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.4 சேவைக் கட்டணம் + ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

மேலும், வாடிக்கையாளர்கள் ரூ.1,00,000க்கு மேல் மற்றும் ரூ.2,00,000 வரையிலான ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கு ரூ.12 சேவைக் கட்டணம் + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இந்த அறிவிப்பு எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories