பாதுகாப்பு ஆப்பில் பாதுகாப்பின்மை: இந்த மால்வேர் ஆப் இருந்தா… அன்இன்சால் பண்ணுங்க!

Hacker - 2026

Two-factor authentication என்பது பல செயலிகளில் தற்போது பயன்படுத்தப்படும் பாதுகாப்பு முறை ஆகும்.

பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற செயலிகளில் மட்டுமல்லாது சில பேங்கிங் ஆப்களிலும் இது உள்ளது. குறிப்பிட்ட செயலியை பயன்படுத்துவது அந்த போனின் உரிமையாளர்தானா என்பதை உறுதிப்படுத்தவே இந்த Two-factor authentication.

இந்த முறையை கையாள சில ஆப்களும் கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ளது. அப்படியான ஒரு ஆப் தான் ‘2FA Authenticator’. பாதுகாப்பு அம்சமாக இருந்த செயலியே தற்போது பாதுகாப்பு இல்லை என கூகுள் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு போன்களை அச்சுறுத்தும், தகவல்களை திருடும் மால்வேர் 2FA Authenticatorக்குள் நுழைந்துள்ளது.

2FA Authenticator என்ற இந்த ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்யப்பட்டு 15 நாளுக்குள் 10ஆயிரம் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னரே மால்வேர் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டு அந்த செயலியை கூகுள் நீக்கியுள்ளது.

இந்த Vultur மால்வேர் செல்போனுக்குள் நுழைந்து பாதுகாப்பு அம்சங்களை திருடும். அதாவது பேங்கிங் செயலிகளில் பயன்படுத்தப்படும் யூசர் நேம், பாஸ்வேர்டுகளை திருடுவது, ஓடிபியை கையாள்வதுபோன்ற முக்கிய பாதுகாப்பு அம்சங்களை திருடும்.

app - 2026

கிட்டத்தட்ட 35 லட்சத்துக்கும் அதிகமான செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ளது. அனைத்தும் பாதுகாப்பு என்றெல்லாம் சொல்ல முடியாமல் பாதுகாப்பு அம்சங்களில் சொதப்புகிறது கூகுள்.

ஒவ்வொரு நொடியும் ரிவியூ செய்யப்பட்டு அனைத்து செயலிகளையும் கூகுள் கண்காணித்தாலும் கூகுளின் கண்ணில் மண்ணைத் தூவி மால்வேர்கள் நுழைந்து விடுகின்றன.

அதனை கண்டுபிடிப்பதற்குள் பல ஆயிரம் டவுன்லோடுகள் செய்யப்பட்டு விடுகின்றன. அதனால் மிக முக்கியமான தேவைக்கான முக்கிய செயலியை மட்டுமே நாம் பயன்படுத்துவது ஆகச் சிறந்தது.

ஏற்கெனவே ப்ளோபோட் மால்வேர் ஆண்ட்ராய்ட் பயனர்களை அச்சுறுத்தியது. `ஃப்ளூபோட்’ மால்வேர் உங்கள் ஸ்மார்ட்போனுக்குள் நுழைந்தால் உங்கள் கிரெடிட் கார்ட் விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள், எஸ்.எம்.எஸ் மெசேஜ்கள், பிரவுசர் தகவல்கள் முதலான பலவற்றையும் பார்க்க முடிவதோடு, அவற்றைக் கசிய வைக்கவும் முடியும்.

உங்கள் ஸ்க்ரீனில் திடீரென காட்டப்படும் செக்யூரிட்டி அப்டேட், புதிய ஆப்கள் எனக் கூறும் லிங்க் எதையும் க்ளிக் செய்யாமல் இருக்க வேண்டும். செக்யூரிட்டி அப்டேட், புதிய ஆப்கள் ஆகியவற்றை இன்ஸ்டால் செய்யப் பல்வேறு இணையதளங்களைப் பயன்படுத்த வேண்டியது இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories