பாவூர்சத்திரம், தென்காசி:
நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வருவது உறுதியாகி உள்ளது. ரஜினி, கமல் இருவரும் தனித்தனியே அரசியல் கட்சிகளைத் தொடங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
இருவரும் தமது ரசிகர் மன்ற நிர்வாகிகளோடு தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டுவருகின்றனர்,
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா கலந்து கொள்ள வந்துள்ளார். அப்படியே, இன்று காலை கீழப்பாவூரில் உள்ள ஸ்ரீ நரசிம்மர் வந்துள்ளார் ஐஸ்வர்யா.
இந்தக் கோவிலில் வழக்குகளில் வெற்றி பெற , கடன், நோய் தீர என பல வேண்டுதல்களை முன்வைத்து, இங்கே வந்து பலரும் பூஜைகள் செய்வது வழக்கம்.
அந்த வகையில், ரஜினி கட்சி துவங்கும் வேளையில் ரஜனி மகள் வந்து ரஜினி அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சங்கல்பம் செய்து கொண்டு, சிறப்பு பூஜை செய்தாக தெரிகிறது. ரஜினி மகள் வந்து சென்ற தகவலை உள்ளூர் செய்தியாளர்களுக்கும் கோவில் நிர்வாகத்தில் இருந்து யாரும் சொல்லவில்லை என்பதால், ரகசியம் காப்பது ஏன் என்பது தெரியாமல் உள்ளூர் செய்தியாளர்களும் குழம்பித்தான் போயுள்ளனர்.



