அஜித்துடன் பணி.. ஆசிர்வதிக்கப்பட்ட தருணம்: இயக்குநர் மனு ஆனந்த்!

ajithkumar - 2026

அஜித் கூறிய அறிவுரைகள் தனக்கு பெரும் உத்வேகமாக இருப்பதாக ‘எஃப்.ஐ.ஆர்’ இயக்குநர் மனு ஆனந்த் கூறியுள்ளார்.

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் ‘எஃப்.ஐ.ஆர்’. இதில் கெளதம் மேனன், கெளரவ் நாராயணன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் விஷ்ணு விஷாலுடன் நடித்துள்ளனர். திரையரங்குகளில் பிப்ரவரி 11 வெளியாகுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இயக்குநர் கவுதம் மேனனுடன் 8 ஆண்டுகள் அசோசியேட்டாக பணிபுரிந்திருக்கிறேன். அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்திலும் பணிபுரிந்துள்ளேன்.

அவருடன் பணியாற்றியது ஒரு மிகப்பெரிய அனுபவம், அவர் கூறிய பல அறிவுரைகள் தான் என்னுடைய இந்த பயணத்தில் பெரும் உத்வேகமாக இருக்கின்றன.

manu anand - 2026

ஒரு மனிதராகவும், நடிகராகவும், அவர் மீது எனக்கு பெரும் மரியாதை இருக்கிறது. அவருடன் பணிபுரிந்தது எனக்கு ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட தருணம் என்று நினைக்கிறேன்.

2015ஆம் ஆண்டு தீவிரவாதம் பற்றிய ஒரு கதையை எழுதினேன். ஆனால் அது படமாக மாறவில்லை. அதன் பின்னர் 2018 அந்த கதையில் சில திருத்தங்கள் செய்து அதை ‘எஃப்ஐஆர்’ கதையாக மாற்றினேன்.

இக்கதையை விஷ்ணு விஷாலிடம் நான் சொல்லும்போது, அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பின்னர் அவரே இப்படத்தை தயாரிக்கவும் முடிவு செய்தார்.

இப்படத்தில் உங்களுக்கு ஒரு சின்ன ரோல் இருக்கிறது என்று நான் கவுதம் மேனனுக்கு மேசேஜ் அனுப்பினேன்.

அவர் உடனடியாக ‘எப்போது படப்பிடிப்புக்கு வரவேண்டும்’ என்று சொல் என்று ரிப்ளை செய்தார். என்மேல அவர் வைத்திருந்த நம்பிக்கையும், எனக்கு அவர் கொடுக்கும் ஆதரவும் எனக்கு மிகப்பெரிய விஷயங்கள். இவ்வாறு மனு ஆனந்த் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories