பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மாநிலம் முழவதும் திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தி வருகின்றனர்
திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற பஸ் மறியலில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் ,மறியலுக்கு தயாராக திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் அணிவகுத்து நிற்க எப்படியும் மறியல் செய்யும் முன் கைது செய்திடவேண்டும் என ஆர்வம் காட்டினர் காவல்துறையினர் ,
சற்று தூரம் சென்று மறியலுக்கு உட்கார முயல கட்சி கார்கள் சிலர் ஏல இங்கன வேண்டாம் என அங்கும் இங்குமாக போக கூட்டத்தில் பஸ் மறியல்ன்னு சொல்லிட்டு நடைபயணம் போறனுவோ என்று கட்சிகாரர்கள் முனுமுனுத்தனர்
ஒருவழியாக உட்கார இடத்தை பிக்ஸ் செய்தனர் உட்காரும் போது யாரும் எதையும் யோசிக்காமல் உட்கார மதிமுக ஒன்றிய செயலர் உதயசூரியன் உட்கார இடம் தேடி துண்டை விரித்து உட்கார்ந்தார்
இது கட்சியினர் முகம் சுழிக்கும் படி ஆகிவிட்டது ,ஒருவழியா போலீஸ் கைது செய்ய முயல இருங்க சார் ஒரு பாஸாவது வரட்டும் என அடம் பிடித்தனர் அப்புறம் ஒரு பஸ் வர முன்னால் சென்று கோஷம் போட்டு பின் கலைந்துசென்றனர்



