
வனப்பகுதி ஒன்றில் பசும் புல் தரையில் மேய்ந்து கொண்டிருக்கும் காட்டெருமை ஒன்றை, அங்கு வரும் குட்டியானை வேண்டுமென்றே வம்பிழுந்து ஓடவிட்டுள்ளது.
இணையத்தில் பதிவிடப்பட்டிருக்கும் அந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில், பசுமையான புல் தரையில் காட்டெருமை மேய்ந்து கொண்டிருக்கிறது.
அந்த நேரத்தில் அங்கு வரும் குட்டியானை ஒன்று, காட்டெருமையை பார்த்தவுடன் ஆவேசம் கொண்டு, அது மேயும் இடத்தை நோக்கி வேகமாக ஓடுகிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத காட்டெருமை, யானை வருவதை பார்த்து இரண்டு அடி நகர்கிறது.
ஆனால் காட்டு யானை அதனை வேண்டுமென்றே துரத்துகிறது. அந்த இடத்தில் மேயக்கூடாது என்பதற்கு துரத்துகிறதா? அல்லது இரண்டுக்கும் இடையே ஏதேனும் முன்பகை இருந்ததா? என்றெல்லாம் தெரியாது.
பார்ப்பதற்கு குட்டி யானையாக இருந்தாலும், வலுவாக தெரியும் காட்டெருமையை விடாப்பிடியாக ஓடவிடுகிறது.
பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும் வகையில் இந்தக் காட்சி இருப்பதால், இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.
🐘🦬tusker & Indian Gaur at one frame.🐘🦬 Vc – saran 🐘🦬 pic.twitter.com/I2uS0oQ5Iu
— Kishore Chandran🇮🇳 (@Kishore36451190) February 16, 2022