December 6, 2025, 12:47 PM
29 C
Chennai

பிரசித்திபெற்ற குமரிமாவட்ட சிவாலய ஓட்டம் வரும் மார்ச் 1இல் நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில்
பிரசித்தி பெற்ற மஹாசிவராத்திரி சிவாலய ஓட்டம் வரும் மார்ச் 1இல் கோலாகோலமாக‌நடைபெறும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில்
உள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று ஓடிச் சென்றே வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ பிரசித்தி பெற்றது. சுமார் 118 கிலோமீட்டர் தூரம் கொண்டது இந்த சிவாலய ஓட்டம். சிவராத்திரி அன்று அதிகாலை 3 மணி அளவில் காவி வேட்டி, காவித்துண்டு, ருத்ராட்சம் அணிந்து, வெறுங்காலுடன் சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு, பனை ஓலை விசிறியுடன் இந்த ஓட்டத்தை சிவ பக்தர்கள் தொடங்குவார்கள். 12 சிவாலயங்களில் முதல் ஆலயமான முஞ்சிறை என்ற திருமலையில் இருந்து இந்த ஓட்டம் தொடங்கும். 12-வது ஆலயமான திருநட்டாலம் ஆலயத்தை தரிசிக்கும் வரை சிவ நாமத்தை உச்சரித்தபடியே இந்த ஓட்டம் நடைபெறும். முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவில், திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவில், திருபன்னிபாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு சிவன்கோவில், திருபன்றிகோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில்’ ஆகியவை அந்த 12 ஆலயங்கள் ஆகும்.ஆண்டுதோறும் சிவராத்திரி நன்னாளில் பக்தர்கள் சிவாலய ஓட்டம் சென்று, வேண்டியதை பெறுகிறார்கள். சிவாலய ஓட்டத்தில் பங்கு கொள்ளும் பக்தர்களுக்கு ஆங்காங்கே மோர், பழரசம், பானகம், கிழங்கு, கஞ்சி போன்றவற்றைக் கொடுத்து பக்தர்கள் பலரும் மகேஸ்வர பூஜை செய்கிறார்கள். பீமன் ஒரே சிவராத்திரி நாளில் 12 சிவாலயங்களுக்கும் ஓடியதால், இந்த ஆலயங்கள் ‘சிவாலய ஓட்டத் தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்களில் மகா சிவராத்திரி மட்டுமின்றி, மாதாந்திர சிவராத்திரி நாட்களிலும் சிவராத்திரி ஓட்டம் நடக்கிறது
இந்த ஆண்டு வரும் மார்ச் 1இல் மஹாசிவராத்திரி சிவராத்திரி ஓட்டம் நடைபெறுவதால் அன்று கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த்
மார்ச் 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

IMG 20220225 164750 - 2025
29cbb img 20190703 112204 - 2025
IMG 20220225 164718 - 2025
wewe - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories