தமிழகத்தில் 12மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில்‌தென்காசி விருதுநகர் உட்பட‌ 12 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் அறிவித்துள்ளதாவது,
கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு உள்ளதால், சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலுார் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்று மிதமான மழை பெய்யும்.

கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். வரும், 28ம் தேதி முதல் மார்ச் 1 வரை வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 32 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் மட்டும், 1 செ.மீ., மழை பெய்துள்ளது. தெற்கு கடலோர பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் இருந்து பலத்த மழை பெய்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பாபநாசத்தில் 9, அம்பாசமுத்திரத்தில் 7, திருநெல்வேலியில் 3 மி.மீ., மழை பதிவானது.

120797959 80b4bee0 b78c 4247 9e0c 2bd84a6b6f9e - 2026
ALSO READ:  மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories