கூடுதல் சுமை.. பாதிக்கும் கற்பித்தல் பணி: ஆசிரியர்கள்!

teacher - 2026

கூடுதல் பணிச்சுமையால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாக, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன.

கொரோனா தொற்று பரவ காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த இரண்டு ஆண்டுக்கு மேல் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.

தொற்று பரவல் குறைந்து, பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட துவங்கியுள்ளன. தற்போது, கூடுதலாக இதர பணிகள் வழங்கப்படுவதால், பணிச்சுமை ஏற்பட்டு கற்பித்தல் பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.

இது குறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:அரசு சார்ந்த எந்த ஒரு பணியாக இருந்தாலும், முதலில் ஆசிரியர்களே கூடுதல் பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

கற்பித்தல் பணி மட்டுமன்றி, ஆண்டுதோறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். தகவல்களை சேகரித்து வைக்கும், ‘எமிஸ்’ தளத்தில், மாணவர்களின் வயது, எடை, உயரம் உள்ளிட்ட விவரங்களை அவ்வப்போது பதிவிட வேண்டும்.

பள்ளி நுாலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர் உட்பட அனைத்து விவரங்களையும் கணினியில் பதிவிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர, மாணவர் சேர்க்கை, இல்லம் தேடி கல்வி திட்டம், தேர்தல் பணி என, அனைத்துக்கும் களப்பணி ஆற்றுகிறோம்.

பெரும்பாலான அரசு பள்ளிகளில், பணியாளர்களின் பணியிடம் காலியாகவே உள்ளது. அப்பணிகளையும் நாங்களே செய்ய வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு, கூடுதல் பணிச்சுமையால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது.

ஏற்கனவே, ஊரடங்கு காலத்தில் போதிய கல்வி கிடைக்காமல், மாணவர்களின் கல்வி திறன் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இதர பணிகளை தவிர்த்து மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories