தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 5-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை யும்,
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 9-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரையும் .
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களிடம்  கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
10, 11 மற்றும் 12 -ம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25 -ந்தேதி தொடங்குகிறது.

images 25 - 2026

10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளை மொத்தம் 23 லட்சம் பேர் எழுதுகிறார்கள். வினாத்தாள் வெளியாகாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்.

தேர்வுகள் முடிந்தபிறகு 2022-2023 பள்ளி கல்வி ஆண்டுக்காக 1 முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான வழக்கமான வகுப்புகள் 20.6.22 முதல் தொடங்கும்.

11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் 24.6.2022 முதல் தொடங்க உள்ளது.
பிளஸ்-1 வகுப்புகளுக்கு ரிவி‌ஷன் டெஸ்ட் இப்போது முதல் பொதுத்தேர்வு வரை நடைபெறும்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

தேர்வுக்காக மாணவர்கள் மகிழ்ச்சியாக படிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மன நிறைவோடு தேர்வுகளை எழுத வேண்டும் என்றும் கூறி உள்ளார். தேர்வு எழுதுவதை காட்டிலும் நான் படிச்சி ஆர்வத்துடன் நான் தேர்வு எழுத இருக்கிறேன் என்ற அளவுக்கு மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்லி உள்ளார்.

இனிவரும் காலங்களில், ‘நான் முதல்வன்’ கவுன்சிலிங் மூலமாக 9-ம் வகுப்பு மாணவர்களில் இருந்து 10-ம் வகுப்பில் எந்த குரூப் எடுக்கிறீர்கள் என்பது வரை உங்களது திறமை என்ன? என்ற அளவுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

பள்ளி கல்வித்துறை அதில் அதிக கவனம் செலுத்தும். ஒவ்வொரு பள்ளிக்கூடங்களும் இதுபோன்ற கவுன்சிலிங் மையங்களாக விரைவில் மாற இருக்கிறது. உயர்கல்வி படிப்புக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் படித்து என்ன மாதிரியான வேலைக்கு செல்லலாம் என்ற அளவுக்கு இந்த திட்டம் அமையும்.

மாணவர்களுக்கு சொல்லி கொள்வது, பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு படிப்பதை காட்டிலும் உங்களுக்கு எதில் கவனம் அதிகம் எதில் திறமை அதிகம் உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். தைரியமாக படியுங்கள். உங்கள் முன்னேற்றத்துக்கு நாங்கள் இருக்கிறோம்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

2 செட் வினாத்தாள் பிரிண்ட் செய்கிறோம். தேர்வு எழுதும் அன்றைய தினம் தான் எந்த ‘செட்’ வினாத்தாளை வழங்க வேண்டும் என்பதை முடிவு எடுத்து சொல்வோம். அதேபோல் மார்க் வி‌ஷயத்தில் பரீட்சை பேப்பர் திருத்தும்போது மாணவர்கள் எழுதிய விடைக்கு ஏற்ப மதிப்பெண் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படும்.மாணவர்கள் பதற்றம் அடையாமல் தேர்வை எதிர்கொள்ளவேண்டும் என் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories