images 23 1 - 2026

பாகிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு..பலி57ஆக உயர்வு

சற்றுமுன்

பாகிஸ்தான் மசூதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்த சம்பவத்தில்
தற்போது 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 200 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும்
கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரம், கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. மசூதியில் ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக 30 பேர் உயிரிழந்ததாக கூறிய நிலையில், தற்போது 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் 200 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், இது ஒரு தற்கொலை தாக்குதல் என  பெஷாவர் காவல்துறை அதிகாரி ஹரூன் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெஷாவர் காவல்துறை அதிகாரி ஹரூன் ரஷீத் கான் கூறியதாவது:-
பெஷவார் பகுதியில் உள்ள ஜாமியா மசூதிக்குள் கறுப்பு உடை அணிந்த இரண்டு பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர். அங்கு, முதலில் காவலலியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு பின் உள்ளே நுழைந்து மேலும் 6 பேரை சுட்டு உள்ளனர்.அங்கிருந்து மசூதியின் பிரதான மண்டபத்திற்குள் நுழைந்து இருவரில் ஒருவர் மனித வெடிகுண்டாக மாறி வெடிக்கச் செய்துள்ளார். இதில் ஏராளமானோர் உடல் சிதறிக் கிடந்தனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை யாரும்
பொறுப்பேற்கவில்லை.  
இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இந்த நிலையில் பெஷாவர் குண்டுவெடிப்புக்கு பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

images 23 1 - 2026
images 16 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.