தமிழகம் கேரளத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை…

வங்கக் கடலில் நிலவும்காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்குவதால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, தமிழகத்தில் வட மாவட்டங்களிலும் கேரளத்தில் பல பகுதிகளில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்தநேரத்தில் பலத்த தரைக்காற்று வீசும்’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று விடும். இந்த காற்றழுத்த மண்டலம், தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று கன மழை பெய்யும்.

மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில், மிக கன மழையும், புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழையும் பெய்யும்.

நாளை மறுநாள், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில், மிக கன மழையும்; செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் கன மழையும் பெய்யும்.தரைக்காற்றுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், நாளை முதல் இரண்டு நாட்களுக்கு, மணிக்கு, 45 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசும். தமிழக கடற்பகுதிகளில் மணிக்கு, 65 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசும். இதனால், வரும் 7ம் தேதி வரை, மீனவர்கள் வங்கக் கடலின் தெற்கு, கிழக்கு, தென் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இந்தநிலையில் தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.

images 22 1 - 2026

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை இலங்கையின் கிழக்கு கடற்கரையில் இருந்து வடமேற்கு நோக்கி நகர்வதாகவும், இதன் காரணமாக இன்று முதல் திங்கள் கிழமை வரை 3 நாட்களுக்கு கேரளாவின் பல பகுதிகளிலும் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழையின் காரணமாக கடலில் சூறைக்காற்று வீசும் என்றும் மீனவர்கள் வருகிற 7-ந் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories