gallerye 055559636 2975814 - 2026

தமிழகத்தில் 8மாவட்ட பாஜக நிர்வாகிகள் மாற்றம்..

சற்றுமுன்

பாஜக கட்சி ரீதியிலான எட்டு மாவட்டங்களில் தலைவர்களை நீக்கம் செய்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்றுவெளியிட்ட அறிக்கையில் அறிவித்துள்ளார்.

gallerye 055559636 2975814 - 2026

நெல்லை, நாகை, சென்னை மேற்கு, வடசென்னை மேற்கு, கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, தி.மலை மாவட்ட பாஜக தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

தலைவர்கள், நிர்வாகிகள், அணிகள், மண்டல கமிட்டிகள் என அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்டங்களை சீரமைக்கும் பொருட்டு முழுமையாக கலைக்கப்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளது பாஜக வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 மாவட்டங்களுக்கும் புதிய பொறுப்பாளர்களை நியமித்தும் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை தற்காலிகமாக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

அதன்படி
நெல்லை – கட்டளை ஜோதி,
நாகை – டி.வரதராஜன்,
சென்னை மேற்கு- டி.என்.பாலாஜி,
வடசென்னை மேற்கு- மனோகரன்
கோவை நகர்- ஏ.பி.முருகானந்தம்,
புதுக்கோட்டை – செல்வம் அழகப்பன்,
ஈரோடு வடக்கு- எஸ்எம் செந்தில்குமார்,
திருவண்ணாமலை வடக்கு- சி.ஏழுமலை ஆகியோர் றுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.