202203051258207475 Tamil News tamil news OPS Brother Removal From ADMK MEDVPF 1 - 2026

சசிகலாவை சந்தித்து பேசிய ஓபிஎஸ் சகோதரர் அதிமுகவில் நீக்கம்

சற்றுமுன்

சசிகலாவை திருச்செந்தூரில் சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உட்பட 4 பேர் இன்று அதிமுகவில் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

202203051258207475 Tamil News tamil news OPS Brother Removal From ADMK MEDVPF 1 - 2026

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான  வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில்  நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும்  உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால்,ஓ. ராஜா,   (தேனி மாவட்ட ஆவின் தலைவர் )  
முருகேசன்,  (தேனி மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் )  
வைகை. கருப்புஜி, (தேனி மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் )  
சேதுபதி,  (கூடலூர் நகர புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் )  

ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர், பொறுப்பு உட்பட அனைத்துப்  பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.  கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்  கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.  
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

மேலும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 33 நிர்வாகிகளை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளனர் இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேனி மாவட்டத்தை சேர்ந்த ஏ.ராமச்சந்திரன், எஸ்.தனலட்சுமி, ஆர்.தங்க ராஜ், டி.கருப்பசாமி, எம்.முருகன், எஸ்.நவீன்குமார்,எஸ்.அருண்மொழி, செல்வ லட்சுமி அன்பழகன், கருப்பாணி, சாலைக்கரை முத்தையா, ஏ.தனபால், ஏ.ஜெயராமன், பெருமாள், எஸ்.காதர், எஸ்.சரவணன், கே.போகராஜ், எம்.கோடீஸ்வன், எஸ். சின்னகாளை, ஆர்.ஜெயப்பிரகாஷ், எஸ்.முத்தையா, பி.சீனிநாயுடு, ஆர்.விமல் ராஜ் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

இதேபோல தேனி மாவட்டத்தை சேர்ந்த எம்.பி.ராமர், சேரலாதன் உள்பட 33 பேர் அவரது அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

அவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.