
ரியல்மியின் புதிய இடைப்பட்ட ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி96 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது.
இந்தியாவில் ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.12,999 ஆக இருக்கிறது.
அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.15,499 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்பீட் பிளாக் மற்றும் ஸ்பீட் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனானது அமேசான் மற்றும் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் மூலம் வாங்குவதற்கு கிடைக்கும்.
ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனானது க்ளாஸி டிசைன் வடிவமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சம் குறித்து பார்க்கையில், இதில் 120 ஹெர்ட்ஸ் ஸ்மூத் டிஸ்ப்ளே, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ரேம் நீட்டிப்பு ஆதரவோடு வருகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் 120 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்பளே வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட் வசதியுடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ரேம் வேரியண்ட்களில் வருகிறது. அது 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் வேரியண்டில் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. அது 50 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 எம்பி பிளாக் அண்ட் வைட் லென்ஸ் ஆகும்.
அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் 50 எம்பி கேமரா ஆனது எச்டிஆர் ஆதரவு, நைட் மோட், டூயல் ஆதரவு, அல்ட்ரா மேக்ரோ உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டிருக்கிறது.
செல்பீகளுக்கும், கால் அழைப்புகளுக்கு என16 எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போனானது ரியல்மி யுஐ அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வருகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த சாதனத்தில் 33 வாட்ஸ் டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் சாதனத்தை 70 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம்.
ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
பின்பு 1,080×2,400 பிக்சல் தீர்மானம், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த புதிய ஸ்மார்போனில் கேமிங் வசதிக்கு தகுந்தபடி மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போன் மாடல்.
அதேபோல் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.