புஷ்பா பட ஐக்கானிக் ஆக்க்ஷனை மைதானத்தில் செய்து காட்டிய கோலி!

virat - 2026

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பேட்ஸ்மேனுமாகிய விராட்கோலி மிகவும் குறும்புக்காரர் என்பது அனைவருக்கும் தெரியும்,

மைதானத்தில் தன்னை சீண்டுபவர்களுக்கு தனது பேட்டால் எப்படி தக்க பதிலடி கொடுப்பாரோ, அதேபோல அவ்வப்போது சில குறும்புத்தனம் செய்து ரசிகர்களையும் கவர்வது அவரது வழக்கம்.

இந்த நிலையில், இலங்கை- இந்தியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி பஞ்சாபில் உள்ள மொகாலியில் நடைபெற்று வந்தது.

இந்த போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது பீல்டிங் செய்து கொண்டிருந்த விராட்கோலி புஷ்பா படத்தில் மிகவும் புகழ்பெற்ற அல்லு அர்ஜூனின் மேனரிசமான தாடியை தடவுவதைப்போலவே விராட்கோலியும் தனது தாடியை தடவி காட்டினார்.

virat kohli - 2026

அவரது இந்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன் தாடியை தடவிக்கொண்டே புஷ்பா அடங்காதவன்டா என்று கூறுவது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜூனின் நடிப்பில் வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் அல்லு அர்ஜூனின் வித்தியாசமான நடிப்பும், அவரது உடல்மொழியும் பலரையும் வெகுவாக ஈர்த்தது.

அந்த படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி பாடலுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் ப்ராவோ உள்ளிட்ட பலரும் நடனம் ஆடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, கிரிக்கெட் மைதானத்தில் விராட்கோலி அல்லு அர்ஜூனைப் போல செய்து காட்டியது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

விராட்கோலி ஏற்கனவே ஹர்பஜன்சிங், ஷிகர்தவான் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் போல மைதானத்தில் நடித்து காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட்கோலிக்கு இந்த டெஸ்ட் போட்டி 100வது டெஸ்ட் போட்டி ஆகும். இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories