TNPSC தேர்வு: விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு.. தவறான பதிவை திருத்த வாய்ப்பு..!

10 May30 TNPSC - 2026
10 May30 TNPSC

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள், விவரங்களை தவறாக உள்ளீடு செய்திருந்தால் வருகிற 14 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை இணையம் மூலமாக திருத்தம் செய்துகொள்ளலாம் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான பணியாளர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களைக் கொண்ட குரூப் 2, குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான விண்ணப்பம் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி தொடங்கியது. மார்ச் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவியாளர், கீழ்நிலை எழுத்தர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 5,143 காலிப் பணியிடங்களுக்குத் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.

முதல்நிலைத் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. நேர்முகத் தேர்வு பதவிகளுக்கு- முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வந்தபின்னர் முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடைபெறும்

இந்நிலையில், குரூப் 2, 2ஏ தேர்வுக்கு ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் அதில் விவரங்களை தவறாக உள்ளீடு செய்திருந்தால் வருகிற வருகிற 14 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை திருத்தம் செய்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இணையவழி விண்ணப்பத்தில் உள்ள தகவல்களில் ஒரு சில தகவல்கள்
தேர்வரி ஒருமுறை நிரந்தரப்பதிவில் இருந்து முன்கொணரப்பட்டவை.

அவ்வாறான தகவல்களைத் திருத்தம் செய்வதற்கு முதலில் தனது ஒருமுறை நிரந்தரப்பதிவில்(OTR)ல் EDIT PROFILE-ல் சென்று உரிய திருத்தங்களை செய்து அவற்றை சேமிக்கவும்.

அதன்பிறகு விண்ணப்பத்திற்கு எதிரே உள்ள EDITல் சென்று விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பும் விவரங்களை திருத்தம் செய்து இறுதியாக சேமித்து அதனை சமர்ப்பித்து அதற்குரிய நகலினை அச்சுப்பிரதி எடுத்துக்கொள்ளவும்.

உரிய தேர்வுக் கட்டணத்தை செலுத்திய தேர்வர்கள், மீண்டும் செலுத்தத் தேவையில்லை.

tnpsc - 2026
tnpsc 1 - 2026

மேலும் சந்தேகங்களுக்கு helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சல் முகவரியையும், இதர சந்தேகங்களுக்கு grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் பயன்படுத்தலாம்.

விளக்கம் ஏதேனும் தேவைப்படுமெனில் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்புகொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories