books - 2026

புத்தகங்களை எடுத்து வந்து புதுமணமக்களுக்கு சீர்!

சற்றுமுன் அடடே... அப்படியா? தமிழகம்
books - 2026

எதிர் கோட்டை கிராமத்தில் நண்பனின் திருமணத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று நண்பர்கள் சீராக வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே எதிர்க்கோட்டையை சேர்ந்த சுப்புராஜ்- முத்துலட்சுமி தம்பதியின் மகனான நவநீதன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் மீனாட்சிபுரத்தை சேர்ந்த அனிதா என்பவருக்கும் நேற்று எதிர்க்கோட்டையில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் மாப்பிள்ளையின் நண்பர்கள் 25 ஆயிரம் மதிப்பிலான 200-க்கு மேற்பட்ட புத்தகங்களை தாம்புல தட்டில் வைத்து சீர் வரிசை போல ஊர்வலமாக கொண்டு வந்து புதுமண தம்பதியினரிடம் வழங்கினார்கள்.

book - 2026

இந்த நிலையில் புத்தகங்களை சீர் வரிசையாக வழங்கியதை அந்த பகுதி மக்கள் மிகவும் ஆச்சரியத்துடன் வியந்து பார்த்தனர்.

தற்போது பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை செல்போனில் மூழ்கி இருப்பதால் அவர்களிடையே புத்தக வாசிப்பை பரவலாக்குவதன் மூலம் அரசியல் சிந்தனைகளையும் எடுத்துரைக்க முடியும் என மணமக்கள் தெரிவித்தனர்.

திருமணத்துக்கு பரிசு என தேவையற்ற பல அலங்கார அழகு பொருட்களை வழங்கும் நண்பர்களுக்கு மத்தியில், 200 புத்தகங்கள் பரிசாக வழங்கிய நண்பர்களை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

செல்போன்களில் மூழ்கி உறவுகளை மறக்கும் இந்த காலத்தில், புத்தகங்கள் மூலம் உறவுகளை வலுவாக்கியுள்ளனர் இந்த நண்பர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.