images 26 2 - 2026

திருமலையில் அதிகரித்த இலவச டிக்கட்..

சற்றுமுன்

திருப்பதியில் நேற்று ஒரே நாளில் ரூ.4.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானதை தொடர்ந்து இலவச டிக்கட் எண்ணிக்கை யும் தினமும் 40ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

திருமலையில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தரிசனத்திற்கு பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது திருப்பதியில் நேரடியாக இலவச தரிசன டோக்கன் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

முதலில் 10 ஆயிரம் பேர் மட்டுமே இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது 30 ஆயிரம் பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மேலும் கூடுதலாக 10 ஆயிரம் பேர் என மொத்தம் 40 ஆயிரம் பக்தர்கள் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான தரிசன நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் சாதாரணப் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வார நாட்களாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமையில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்து, சாதாரணப் பக்தர்களுக்கு இலவச தரிசனத்தில் வழிபட கூடுதல் நேரம் ஒதுக்கப்படுகிறது.

திருப்பதியில் நேற்று 65,155 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,213 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானதாக திருமலை தேவஸ்தான செய்தி குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.

images 26 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.