சைக்கிள் ஓட்டியபடியே ரூபிக் கனசதுரம்! சென்னை சிறுவன் கின்னஸ் சாதனை!

Published:

Jayadarshan Venkatesh - 2026

ரூபிக்ஸ் கியூப் எனப்படும் கனசதுரத்தை தீர்ப்பது ஆர்வம் மிக்கவர்களுக்கு சவாலான ஒன்றான காரியமாகவே எப்போதும் இருக்கிறது.

அமைதியான சூழலில் ரூபிக் கனசதுரத்தை தீர்ப்பதே அதிக சவால் மிக்க காரியம் என்ற நிலையில், சென்னையை சேர்ந்த சிறுவன் அதிவேகமாக ரூபிக் சதுரத்தை தீர்த்து உலக சாதனை படைத்து அசத்தி இருக்கிறார்.

அதிவேகமாக ரூபிக் கனசதுரத்தை தீர்ப்பதோடு, சைக்கிள் ஓட்டிக் கொண்டே ரூபிக் கனசதுரத்தை தீர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஜெயதர்ஷன் வெங்கடேசன் சைக்கிள் ஓட்டிய படி 14.32 நொடிகளிலேயே ரூபிக் கனசதுரத்தை தீர்க்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவை Guiness World Records தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

சைக்கிள் ஓட்டும் போது தனது முழங்கை கொண்டு ஹேண்டில்பாரை கண்ட்ரோல் செய்து கொண்டு இரு கைகளால் அதிவேகமாக ரூபிக் கனசதுரத்தை சுழற்றுகிறார்.

சைக்கிளை ஓட்டிக் கொண்டு செல்லும் போதே, ரூபிக் கனசதுரத்தை தீர்க்கும் ஜெயதர்ஷன் வெங்கடேசன் கனசதுரத்தை தீர்த்து முடித்ததும், தனது கைகளை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூபிக் கனசதுரத்தை அதிவேகமாக தீர்ப்பதற்கான பயிற்சியில் தான் ஈடுபட்டு வந்ததாக ஜெயதர்ஷன் வெங்கடேசன் தெரிவித்து இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் Guiness World Records பதிவு பல லட்சம் வியூஸ்களை பெற்று இருக்கிறது. பலர் ஜெயதர்ஷன் வெங்கடேசனை பாராட்டி வீடியோவில் கமெண்ட் செய்து இருக்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னையை சேர்ந்த சிறுவன் தண்ணீருக்கு அடியில் ரூபிக்ஸ் கனசதுரத்தை தீர்த்து கின்னஸ் உலக சாதனை படைத்தார்.

இவர் தண்ணீருக்கு 2 நிமிடங்கள் 17 நொடிகள் தண்ணீருக்கு அடியில் இருந்து ரூபிக் கனசதுரத்தை தீர்த்தார். முன்னதாக தண்ணீருக்கு அடியில் இருந்தபடி ஐந்து கனசதருத்தை தீர்த்ததே உலக சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை சென்னையை சேர்ந்தவர் முறியடித்து அசத்தினார்.

இதுதவிர இளையராம் சேகர் என்பவர் மூச்சைப்பிடித்துக் கொண்டு ஆறு ரூபிக்ஸ் கனசதுரத்தை தீர்த்து கின்னஸ் சாதனை படைத்து இருந்தார்.

ஜெயதர்ஷன் வெங்கடேசனின் சாதனையை பொருத்தவரை இவர் சைக்கிள் ஓட்டியபடி ரூபிக் கனசதுரத்தை தீர்க்கவே இத்தனை நேரம் எடுத்துக் கொண்டார், ஆனால் சற்று முயற்சி செய்து, எந்த நடவடிக்கையும் இன்றி நின்ற இடத்தில் ரூபிக் கனசதுரத்தை தீர்க்க முயற்சித்தால் மேலும் புது சாதனைகளை இவர் படைக்கலாம் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img