ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த ஆண்டாள் திருக்கல்யாணம் …

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் கோவிந்தா கோபாலா பக்தி கோஷம் மழுங்க ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. தரிசனத்துக்கு இரு ஆண்டுகளுக்குப் பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் மிக அதிகளவில் இருந்தது..

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஆண்டாள் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

பங்குனி உத்திரமான நேற்று காலை 7 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு ஆண்டாள்-ரெங்கமன்னார் கீழ ரதவீதியில் செப்புத்தேரில் எழுந்தருளினர். பின்னர் செப்புத்தேரோட்டம் நடந்தது. ரத வீதிகள் வழியாக பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷமிட்டு செப்பு தேரை இழுத்து வந்தனர். 

இரவு 7 மணிக்கு மேல் ஆண்டாள்- ரெங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் ஆண்டாளுக்கு ரெங்கமன்னார் மாங்கல்யம் அணிவிக்க இருவருக்கும்திருமணம் பக்தர்களுக்கு நடத்தி வைத்த மாலைமாற்றும் வைபோகம் நடைபெற்றது. பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண மண்டபத்தில் தரிசனம் செய்தனர்.  2 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கல்யாண திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் வழக்கத்தைவிட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

IMG 20220318 WA0144 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மலர் மாலை, பட்டு வஸ்திரம், கைக்கிளி ஆகிய மங்கலப்பொருட்கள் ஆண்டுதோறும் ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் 5-ம் நாளான கருட சேவையின் போது வெங்கடேசப்பெருமாள் அணிந்து கொள்வதற்காக இங்கிருந்து கொண்டு செல்லப்படும். அதற்கு பதில் மரியாதையாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் பங்குனி மாதம் ஆண்டாள் திருக்கல்யாணத்தின்போது அணிவதற்காக பட்டு வஸ்திரம் கொடுத்தனுப்புவது வழக்கம்.

IMG 20220318 WA0142 - 2026
202203190042597076 AndalRengamannar wedding SECVPF - 2026
IMG 20220318 WA0143 - 2026

இந்த நடைமுறை பல வருடங்களாக நடைபெற்று வருகிறது திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஆண்டாளுக்கு வழங்கிய பட்டு வஸ்திரம் மரியாதையை கோவில் துணை நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு, ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டுவந்து மாட வீதியின் வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் முத்துராஜாவிடம் நேற்று வழங்கினார்.
இந்த நடைமுறை பல வருடங்களாக நடைபெற்று வருகிறது திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஆண்டாளுக்கு வழங்கிய பட்டு வஸ்திரம் மரியாதையை கோவில் துணை நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு, ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டுவந்து மாட வீதியின் வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் முத்துராஜாவிடம் நேற்று வழங்கினார். இந்த பட்டு வஸ்திரங்கள் ஆண்டாள் ரெங்கமன்னார் க்கு அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories