வெளிய போகணும் சொன்னா எல்லோருக்குமே குஷி தான்.. மகிழ்ச்சியில் துள்ளும் நாய்!

dog 4 - 2026

கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் காசி. இவரது குடும்பத்தில் வீரா என்ற பொமரேனியன் நாயும் ஒரு அங்கமாக இருந்து வருகிறது.

பின்னங்கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் நடக்க முடியாமல் இருந்த இந்த நாயினை, ஆதரவற்ற நாய்களை பராமரிக்கும் தொண்டு நிறுவனத்தில் இருந்து காசி தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

மற்ற நாய்களை போல வீரா நடக்க முடியாமல் மன வருத்தத்தில் இருப்பதை அறிந்து, அதனை போக்கும் வகையில் பிரத்யேகமான நடை வண்டி ஒன்றை காசி உருவாக்கினார். அந்த நடை வண்டி மூலம் வீராவிற்கு நடை பயிற்சி அளித்து, நடக்கச் செய்துள்ளார். இதற்காக பல்வேறு தரப்பினரும் காசிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய் குட்டி வீராவிடம், வண்டியை கையில் எடுத்து ‘வெளியே போகலாம் வா’ காசியின் மகள் கூறியுள்ளார். அதற்கு நாய் குட்டி வீராவை தயாரான நிலையில், அவர் சற்று நேரம் தாமதம் செய்துள்ளார்.

அப்போது ‘வெளியே போலமா’ என காசியின் மகள் கேட்ட போது, முன்னங்கால்களை தூக்கி துள்ளியபடி வீரா தன்னை வெளியே அழைத்துச் செல்லும்படி செல்லமாகவும் கோபமாகவும் செய்கை செய்துள்ளது.

இரு… இரு… போலமா?, செருப்பு போட விடு. ஒரு நிமிடம்’ என்று சொன்ன போது, தொடர்ந்து கால்களை தூக்கியபடி துள்ளியது. ‘என்ன மிரட்டுற?’ எனக் கேட்டபோது, அதற்கு பதில் அளிக்கும் வகையில் வீரா குரைத்தது.

இந்தக் காட்சிகளை காசி அவரது செல்போனில் பதிவு செய்து, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

இது குறித்து காசி கூறுகையில், ‘எனது மகள் நாய்கள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த இந்த நாய் குட்டியை வீட்டில் வளர்த்த விருப்பப்பட்டு இங்கு கொண்டு வந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

தங்களின் குடும்பத்தில் ஒருவராக நாய்க்குட்டி வீரா இருக்கிறது. எனது மகள் வண்டியை கையில் எடுத்து வெளியே போகலாம் வா என்று சொன்னதற்கு வீரா குதியோ குதி என குதித்தான். வீராவிற்கு என ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்காக அந்த காட்சிகளை பதிவு செய்தேன்’ என தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories