ரோஹித், ஜடேஜா குறித்து கவலையாக உள்ளது: தோனி மனம் திறந்த கருத்து

dhoni உலகக் கோப்பை தொடரில் ரோகித் மற்றும் ஜடேஜாவின் ஃபார்ம் குறித்து கேப்டன் தோனி மனம் திறந்த கருத்து தெரிவித்துள்ளார். இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தொடர்ந்து நன்றாக விளையாடி வருகிறது. விளையாடிய லீக் சுற்றின் முதல் கட்ட ஆறு போட்டிகளிலும் அனைத்திலும் வென்றுவிட்டது. மேலும் எதிரணியை அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. இந்த ஆறு போட்டிகளில் முதல் ஐந்து போட்டிகளில் வெற்றி சுலபமாகத் தெரிந்தாலும், கடைசி ஆக்லாந்து போட்டியில் துவக்க வீரர்கள் ரன் சேர்க்கத் தடுமாறி ஒரு அச்சத்தை ஏற்படுத்தினர். இருப்பினும், ஒருவர் நன்றாக விளையாடாவிட்டாலும் வேறு ஒருவர் நன்றாக விளையாடி அதை சரி செய்து விடுகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் இந்திய அணி நிச்சயம் கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இந்திய அணி வரும் 19ஆம் தேதி அன்று காலிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இந்த உலகக் கோப்பைத் தொடரில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா பெரிய அளவில் விளையாடி பெயர் சேர்க்கவில்லை. அதுபோல், துவக்கம் முதலே ரவிந்திர ஜடேஜா, அணிக்கு கவலையை ஏற்படுத்தி வருகிறார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜாவுக்கு அணி நிர்வாகம் அதிகம் செலவழித்துள்ளது. அவரது காயம் இன்னொரு பலவீனமாக அமைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆக்லாந்தில் ஜிம்பாப்வேயுடனான போட்டியில் ஒரே ஓவரில் 25 ரன் கொடுத்து, அந்த அணியின் கேப்டன் டெய்லர் ரன் சேர்க்க ஜடேஜாவின் பந்து வீச்சு உதவியது. ஆனாலும், ஜடேஜா பேரில் நம்பிக்கை வைத்து அதற்கு அடுத்த ஓவரையும் அவரே வீசுவதற்கு தொடர்ந்து தோனி கொடுத்தார். அவருடைய நம்பிக்கையை வளர்ப்பதற்கு இது உதவியதாக விமர்சகர்கள் கூறினர். ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங் கவலைக்குரியதாக கணிக்கப்பட்டாலும், ஜிம்பாப்வே போட்டியில் 71 ரன்களைக் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்காத அவரது பந்துவீச்சும் இப்போது கவலையைக் கொடுத்துள்ளது. சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா குறித்து தோனி கூறியபோது, ஜடேஜாவின் ஆட்டம் வேதனையாகவுள்ளது. இருப்பினும் அவர் களத்தில் நன்றாகவே பந்து வீசுகிறார். அவர் மேலும் தனது ஆட்டத்தை மெருகேற்ற வேண்டும். இருந்தாலும், அவர் அணியின் முக்கிய நபர். கடந்த உலகக் கோப்பை முதல் அவரை மேம்படுத்த பல வகையிலும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.. அதற்கு ஏற்றவாறு ஜடேஜாவுக்கு களத்தில் வாய்ப்புகளும் சரியாக அமையவில்லை என்றார். ஆல்ரவுண்டரான ஒரு சுழற்பந்து வீச்சாளரால் பெரிதும் எதிரணியை சீர்குலைத்து விட முடியாதுதான். ஆனாலும் ஜடேஜா முதல் இரு போட்டிகளில் சரியாக செயல்பட்டார். பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க அணிகளுடனான போட்டிகளில். ஆனால் இது குறித்து தோனி கூறியபோது, ஆக்லந்து போட்டி குறித்து அதிகம் கவலைப்படவில்லை. அதில் எல்லைக்கோடு குறைவான நீளமே கொண்டது. அஸ்வின் பந்துவீச்சில் கூட ரன் எடுத்துவிட முடியும் என்று கூறினார். அவரின் நம்பிக்கை, வரும் போட்டிகளிலும் ஜடேஜா நிச்சயம் விளையாடும் அணியில் இருப்பார் என்பதை வெளிக்காட்டுகிறது. அதே நேரம், 6 இன்னிங்சில் பங்கேற்று மொத்தம் 159 ரன்கள் எடுத்துள்ள ரோஹித் சர்மா நிலை அடுத்த கேள்விக் குறி. ரோஹித் சர்மாவின் ஃபார்ம் குறித்து கேப்டன் தோனி கூறுகையில், ரோகித்தின் ஃபார்ம் குறித்து எந்த கவலையும் இல்லை. அவரால் ரன் குவிக்க முடியவில்லையே தவிர, ஆட்டத்திறனில் எவ்வித மாற்றமும் இல்லை. விரைவில் ரோகித்தின் நிலை மாறும் என நம்புகிறேன்… என்றார். ரோஹித், ஜடேஜா இருவர் குறித்தும் பெரிதும் அலட்டிக் கொள்ளாவிட்டாலும், அவர்கள் குறித்த கவலையை ஜிம்பாப்வேயுடனான போட்டியின் பிறகு தோனி பகிர்ந்து கொண்டார். ரோஹித் எவ்வளவு ரன் அடிக்கிறார் என்பது முக்கியமல்ல, எவ்வாறு பேட்டிங் செய்து எந்த முறையில் தன் நம்பிக்கையை அவர் வெளிப்படுத்துகிறார் என்பதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார். 31.8 ஓவர் விளையாடி இரண்டு அரை சதம் அடித்து 159 ரன் எடுத்துள்ள ரோஹித்தின் ஆட்டத்தில் தடுமாற்றம் தெரிகிறது என்பது தோனியின் எண்ணம். அந்த இரண்டு போட்டிகளும் யுஏஇ (57) மற்றும் அயர்லாந்த்(64) ஆகிய அணிகளுடன். ஆனால், ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த ஒரே நபரான ரோஹித்தின் தற்போதைய தடுமாற்றம் தோனிக்கு ஒரு அணித் தலைவராக உள்ளூர கவலையை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிகிறது. ரோஹித்தின் ஃபார்ம் குறித்து பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும், துவக்கம் சரியாக அமையாத பட்சத்தில், நடுவரிசைதான் அணியை தாங்கும் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும். இந்நிலையில், நடுவரிசை குறித்து கருத்து தெரிவித்த தோனி, ரோஹித் போதுமான அளவு செய்திருக்கிறார் என்று கூறியுள்ளார். தனிடையே ரோஹித், ஜடேஜா இருவரும் இந்த உலகக் கோப்பையில் திணறி வருவதாகவும், ஆனால், இந்தியா அவர்கள் இருவரையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜான்டி ரோட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தின் பின்னர் அவர் கருத்து தெரிவித்தபோது, தோனி, ரெய்னா ஆட்டத்தை வீடியோவில் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் குறித்து கேள்விகள் எழுகின்றன. இந்த உலகக் கோப்பையில் அவர்களின் செயல்பாடுகள் குறித்து தோனியும் கருத்தில் கொள்ள வேண்டும். அஜிங்யா ரஹானேவை துவக்க ஆட்டக்காரராகக் களத்தில் இறக்கிவிட்டு, ரோஹித்தை பின்வரிசையில் இறக்கலாம்… என்றார் ஜாண்டி ரோட்ஸ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories