jappan india - 2026

ஜப்பான் பிரதமருக்கு இந்திய பிரதமர் கிருஷ்ண பங்கி பரிசு!

சற்றுமுன்
jappan india - 2026

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷியாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தனமரத்தில் செய்யப்பட்ட ‘கிருஷ்ண பங்கி’ எனும் கலைப்பொருளைப் பரிசாக அளித்தார்.

இந்தியா-ஜப்பான் இடையிலான 14-வது மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இந்தியா வந்தார்.

ஜப்பானின் பிரதமராகக் கடந்தாண்டு அக்டோபரில் பதவியேற்ற பிறகு, கிஷிடா இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல்முறை.

krishna panki - 2026

இந்தியா வந்த கிஷிடாவுக்கு பிரதமர் மோடி சந்தனமரத்தில் செய்யப்பட்ட கிருஷ்ண பங்கி எனும் கலைப்பொருளைப் பரிசாக அளித்துள்ளார்.

ராஜஸ்தானில் செய்யப்பட்ட இந்த கலைப்பொருளின் விவரங்கள் குறித்து தகவலறிந்த அரசுத் தரப்பு வட்டாரங்கள் கூறியதன்படி,

பங்கி என்பது பாரம்பரிய சாதனங்களைக் கொண்டு நுட்பமாக செதுக்கக்கூடியது. அதன் மேல் கைகளால் செதுக்கப்பட்ட தேசியப் பறவை மயிலின் உருவம் உள்ளது.

இதன் முனைகளில் சிறிய பாரம்பரிய மணிகள் உள்ளன. காற்றின் திசைக்கேற்ப அவை அசையும். மேலும் திறப்பிடங்கள் போலவும் அதில் செதுக்கப்பட்டுள்ளது. அதில் அன்பு மற்றும் இரக்கத்தை வெளிப்படுத்தும் கிருஷ்ணரின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!
krishna panki 1 - 2026

இந்நிலையில் மார்னிங் கன்சல்ட் என்ற அமெரிக்காவை துவக்கமாக கொண்ட தளத்தின் கணக்கின்படி உலகளாவிய தலைவர்கள் யார் சிறந்தவர் என்ற கணிப்பு நடத்தப்பட்டது,

அதன்படி பிரதமர் நரேந்திர மோடி 77% மதிப்பீடுகளுடன் உலகின் மிகவும் பிரபலமான தலைவராக உள்ளார் என முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.