தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இறந்த 13 பேரின் குடும்பங்களுக்கு காலா படத்தின் லாபத்தை ரஜினிகாந்த் கொடுப்பாரா என டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்த வாரம் ஊழல் அமைச்சர்களின் பட்டியலை வெளியிடப்போவதாக கூறினார். 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்த புகழேந்தி, நடிகர் ரஜினிகாந்த் காவல் துறையினருக்கு ஆதரவு தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் என கூறினார். தூத்துக்குடி கலவரத்தில் இறந்த 13 பேரின் குடும்பங்களுக்கு காலா படத்தின் லாபத்தை ரஜினிகாந்த் வழங்குவாரா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.



