கர்நாடக இசைக் கலைஞர்களால் சத்குரு என்று போற்றி வணங்கப்படும் கர்நாடக சங்கீத மேதை ஸ்ரீதியாகராஜரின் 172 வது ஆராதனை விழா திருவையாறு காவிரி கரையில் மங்கள இசையுடன் கோலாகலமாக துவங்கியது நாடு முழுவதிலும் இருந்து 5 நாள் ஆராதனை விழாவில் பங்கேற்க பல்லாயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் திருவையாறில் திரண்டுள்ளனர் :
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான சத்குரு தியாகராஜர் திருவாரூரில் பிறந்தவர், ராமபிரான் மீது அதீத பற்று கொண்ட தியாகராஜர் திருவையாறு காவிரி கரையில் வாழ்ந்து ராமனை நினைத்து உள்ளம் உருகி 26 ஆயிரம் கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை இயற்றி பாடியவர்!
திருவையாறு காவிரி கரையில் முக்தி அடைந்த தியாகராஜருக்கு, தியாகராஜரின் கீர்த்தனைகளை இசைத்து புகழ் பெற்ற அவரது சீடர்கள் கோயில் எழுப்பி, ஆண்டுதோறும் 5 நாட்களுக்கு இசை அஞ்சலி செலுத்தும் வகையில் ஆராதனை விழா நடத்தி வருகின்றனர்
சத்குரு தியாகராஜரின் 172 வது ஆராதனை விழா திருவையாறு காவிரி கரையில் திங்கள் கிழமை மாலை துவங்கியது
பிரபல இசைக் கலைஞர் கோபாலகிருஷ்ணன், குத்து விளக்கேற்றி 172 வது ஆராதனை விழாவை துவக்கி வைத்தார்
துவக்க விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்பட ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்
தொடர்ந்து குன்னக்குடி பாலகிருஷ்ணா குழுவினரின் வாய்ப்பாட்டு, முரளிதரன் – ஸ்ரீராம் குழுவினரின் டூயட் வயலின் என தொடர்ந்து இரவு 11 மணி வரை இசை அஞ்சலி நடைபெற்றது.
24 ம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறும் ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அனைத்து இசைக் கலைஞர்களும் சேர்ந்து இசைத்திடும் ‘ பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் ” நிகழ்ச்சி 25 ஆம் தேதி காலை நடை பெற உள்ளது
இந்த நிகழ்ச்சியின் காணொளிக் காட்சி…