ஊழல் மட்டுமல்ல; கொலைக் குற்றச்சாட்டிலும் முதல்வர் சிறை செல்லும் நிலை வரும்: ஸ்டாலின்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி
stalin - 2026

ஊழல் குற்றச்சாட்டில் மட்டுமல்ல, கொலைக் குற்றச்சாட்டிலும் முதல்வர் சிறைசெல்லும் நிலை விரைவில் வரும் என்று பேசினார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்.

கரூர் ஈசநத்தத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு: உள்ளாட்சி தேர்தல் நடத்தாததற்கு காரணம் திமுக என ஆளுங்கட்சி திட்டமிட்டு பொய் கூறி வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீட்டை முறைப்படுத்த கோரியே திமுக வழக்கு தொடர்ந்தது. இன்று நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் ஆளும்கட்சி தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டு வருகிறது – ஸ்டாலின்.

உள்ளாட்சி தேர்தலை நடத்தினால்தான் மக்கள் பணிகள் சரிவர நடைபெறும்.

திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியே உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.

ஜெ மரணத்தில் மர்மம் உள்ளதால், சிபிஐ விசாரணை வேண்டுமென ஆளும்கட்சி சட்டத்துறை அமைச்சரே சொல்லும் நிலையில் தற்போதைய விசாரணை ஆணையம் உள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் மட்டுமல்ல கொலைக்குற்றச்சாட்டிலும் முதல்வர் எடப்பாடி.பழனிசாமி சிறை செல்லும் நிலை விரைவில் வரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.