கடலில் பேச்சு திறனற்ற மாற்றுத்திறனாளி சிறுமி நீச்சல் அடித்து சாதனை…

Published:

இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஸ்கோடி வரை கடலில் பேச்சு திறனற்ற மாற்றுத்திறனாளியான சிறுமி நீச்சல் அடித்து சாதனை படைத்துள்ளார்.

மும்பையில் உள்ள இந்திய கடற்படை நிலையத்தில் பணிபுரிபவர் மதன்ராய். இவரது மனைவி ரெஜினா ராய். இவர்களது மகள் ஜியாராய் (13). பேச்சு திறனற்ற மாற்றுத்திறனாளியான இந்த சிறுமி இலங்கை தலை மன்னார்- தனுஷ்கோடி வரை கடலில் நீச்சல் அடித்து சாதனை புரிவதற்காக நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றார்.

பின்னர் அங்கிருந்து நேற்று சிறுமி ஜியாராய் நேற்று தலைமன்னார் ஊர்மலை என்ற கடல் பகுதியில் இருந்து அதிகாலை 4.22 மணியளவில் நீச்சல் அடிக்க தொடங்கினார். நேற்று மாலை 5.32 மணிக்கு தனுஷ்கோடி கடற்கரை பகுதி வந்தடைந்து 13 மணி நேரம் 10 நிமிடத்தில் சுமார் 28 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீச்சல் அடித்து சாதனை படைத்துள்ளார்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

அவருக்கு தமிழக காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு பூங்கொத்து கொடுத்தும், சந்தனமாலை அணிவித்தும் நேரில் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

சிறுமியின் தந்தை மதன்ராய் கூறியதாவத,இலங்கை தலைமன்னார் ஊர் மலை பகுதியில் இருந்து எனது மகள்அதிகாலை 4.22 மணிக்கு நீச்சல் அடிக்க தொடங்கினார். தனுஷ்கோடி பகுதிக்கு மாலை 5.32 மணிக்கு வந்தடைந்து உள்ளார். தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஷ்கோடி வரையிலான சுமார் 28 கிலோ மீட்டர் தூர கடல் பகுதியை 13 மணிநேரம் 10 நிமிடத்தில் கடந்து சாதனை புரிந்துள்ளார் என தெரிவித்தார்.

இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து நீந்த தொடங்கிய இந்த சிறுமிக்கு பாதுகாப்பாக இலங்கை கடல் எல்லை வரையிலும் மூன்று கப்பலில் இலங்கை கடற்படையினரும், தனுஷ்கோடி கடல் பகுதி வரையில் இந்திய கடல் எல்லைப் பகுதியில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 3 கப்பலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தன.

rms photo 20 03 1 2003chn 208 2 - 2026
IMG 20220321 WA0039 - 2026
ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

Related articles

Recent articles

spot_img