முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 40ஆண்டு கால உதவியாளர் ராஜம்மாள் காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணப்பாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
அதிமுகவின் நிரந்தர பொதுசெயலாளர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராகவும், தோழமையாகவும் 40 ஆண்டுகளாக பணியாற்றியவர் ராஜம்மாள். பாசத்துக்குரிய அவர் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம். ஒரு தாயின் பரிவுடனும், பாசத்துடனம் தன்னை நேசித்து வந்ததாக ஜெயலலிதா நெகிழ்ந்து கூறுவது வழக்கம். ராஜம்மாளை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




