கொல்லங்கோடு மீன பரணி தூக்க நேர்ச்சை உற்சவம் துவக்கம்..

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளியம்மன்கோவில் மீன மரணி  தூக்க நேர்ச்சை
இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.தூக்க திருவிழா நிகழ்ச்சியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கோ

கொல்லங்கோடு பத்திரகாளியம்மன்கோவில்
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். தமிழக-கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மீன பரணி நாளில் பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேவஸ்தான தந்திரி பிரம்மஸ்ரீ கொட்டாரக்கரை நீலமனை கொடியேற்றி வைத்தார்.

முன்னதாக நேற்று காலை 8 மணிக்கு மூலக்கோவிலில் இருந்து அம்மன்கள் எழுந்தருளி பதிவரிசனையின் படி கிணறு வலம் வைத்து ஊர்வலமாக சாஸ்தாநகர்,

திருமன்னம் பகுதிகளுக்கு சென்று மதியம் மீண்டும் மூலக்கோவில் வந்தடைந்தது. அதை தொடர்ந்து சமூக விருந்தில் கலந்து விட்டு 3 மணிக்கு அம்மன்கள் திருவிழா கோவிலான வெங்கஞ்சி கோவிலுக்கு மேளதாளங்களுடன் தாலப்பொலி, யானை உள்ளிட்ட ஊர்வலங்களுடன் கண்ணனாகம் சந்திப்பு, இளம்பாலமுக்கு வழியாக 7 மணிக்கு வந்தடைந்தது. இதனை தொடர்ந்து அங்கு கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இரவு 8 மணிக்கு தூக்க திருவிழா நிகழ்ச்சியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கோவில் தலைவர் ராமச்சந்திரன் நாயர் தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்குமார் வரவேற்று பேசினார். விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்தி பேசினார். கொடியேற்ற நிகழ்ச்சியை காண தமிழக, கேரள அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் அவசர உதவி மருத்துவ சிகிச்சை வழங்கவும் கொல்லங்கோடு நகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

A01 - 2026
governor ravi - 2026

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் தூக்க நேர்ச்சை வருகிற 4-ந் தேதி நடக்கிறது. இதில் ஏராளமான பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சி மற்றும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருகையையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories