நடிகர் பிருத்விராஜ்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள்! நூஜூம் சலீம் குட்டி கைது!

prithviraj - 2026

கேரளா நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் கேரள கலால் துறையினர் நடத்திய சோதனையில் கோகோயின், எல்.எஸ்.டி ஸ்டாம்ப்கள் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருள் கடத்தலில், ஒருவரை கைது செய்துள்ளனர்.

கொச்சியில் உள்ள தேவாரத்தில் உள்ள பிருத்விராஜ் சுகுமாரனுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் கேரள கலால் குழு சோதனை நடத்தியதில் 6.92 கிராம் கோகோயின், 47.2 மில்லிகிராம் எல்.எஸ்.டி மற்றும் 148 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை கைப்பற்றினர்,

பிரித்திவிராஜ்’க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த புனலூரைச் சேர்ந்த ‘நூஜூம் சலீம் குட்டி’ என்ற 33 வயது நபரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர், மாநிலத்தில் உள்ள சில முக்கிய வியாபாரிகளிடம் இருந்து போதைப்பொருள் கொள்முதல் செய்து வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நடிகர் தனது குடியிருப்பை வாடகைக்கு விட்டதாக கேரள அதிகாரிகள் கூறினர். அவர் யாரிடம் இருந்து போதைப்பொருளை வாங்கினார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

“கைது செய்யப்பட்ட சலீம் குட்டி பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு, தொழில் தொடங்குவதற்காக இந்த ஆண்டு கொச்சிக்கு வந்தார்.

அடுக்குமாடி குடியிருப்புக்கு மாதம் ரூ.85,000 வாடகை செலுத்தி வந்தார். அடுக்குமாடி குடியிருப்பு வைத்திருக்கும் நடிகருக்கு இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லை. நுஜூமின் பெற்றோர் பல ஆண்டுகளாக மேற்கு ஆசிய நாட்டில் உள்ளனர்.

சலம் குட்டி அமெரிக்காவில் படிக்கும் போது போதைப்பொருள் பயன்படுத்தத் தொடங்கியதை ஒப்புக்கொண்டார், “என்று அவரை கைது செய்த அதிகாரி ஒருவர் கூறினார்.

இதேபோன்ற போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து சிறப்பு காவல்படையினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஃபசலு என்பவரை கைது செய்தனர் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

கொச்சியில் உள்ள வெளிநாட்டு தபால் நிலையத்தில் எல்.எஸ்.டி முத்திரைகள் அடங்கிய பார்சலை கலால் துறையினர் கைப்பற்றியதை அடுத்து, ஃபசலு கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், கொச்சியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 4 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட ஃபசுலு மற்றும் நுஜூம் ஆகியோர் தற்போது கேரள கலால் துறை அதிகாரிகளின் காவலில் உள்ளனர். வெளிப்படையாக, போலீசார் நடிகர் பிரித்திவிராஜ் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை ஆனால் போதைப்பொருள் கடத்தலில் நடிகருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories