Bull - 2026

பணியிலிருந்த காவலரை முட்டித் தள்ளிய மாடு!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
Bull - 2026

சாலையில் இருந்த காவலரை காளை ஒன்று தூக்கி வீசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தில்லியில் இந்த சம்பவம் நடந்துள்ளது
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில், ஒரு காளை பணியில் இருக்கும் காவலரை நோக்கி வருவதைக் காணலாம்.

அந்த காளை காவலரை நெருங்க நெருங்க, அதிர்ச்சியூட்டும் வகையில் அவரை மூட்டி கீழே தள்ளியது. அவர் சாலையில் செல்போனில் படம்பிடித்துக்கொண்டிருந்தபோது முட்டியதாக தெரிகிறது.

இந்தக் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த சம்பவம் புது தில்லியின் தயால்பூர் பகுதியில் நடந்துள்ளது. அங்கு கான்ஸ்டபிள் கியான் சிங்(36) ஷெர்பூர் சௌக்கில் பணியில் இருந்தார்.

காளை சிங்கைத் தாக்கிய உடனேயே, அவர் 4அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டார். அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைக்கு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயால்பூர் நகரில் தெருக்களிலும், சாலைகளிலும் மாடுகள் சுற்றித்திரிவது தொடர் கதையாக மாறியுள்ளதாக அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாடுகளால் தினமும் அங்கு வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் விபத்தில் சிக்கி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பல முறை மாநகராட்சியில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.