ஒருபோதும் முயற்சியில் பின்வாங்காதீர்கள்! தவளையின் தளரா மனம்!

Published:

snake 1 - 2026

இணையத்தில் நாள்தோறும் வைரலாகும் வீடியோக்களில் அதிகமாக பார்க்கப்படுவது பாம்பு.

பாம்புகளின் முதல் இலக்கு அவற்றின் இரை மட்டுமே. தவளை, எலி உள்ளிட்டவைகளை குறிப்பாக அவை குறி வைத்து சாப்பிடும்.

அவ்வாறு தவளை ஒன்றை குறி வைத்து தாக்க முற்படும்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் இணையத்தில் வைரலாகியுள்ளது.

வீட்டு கேட்டின் மீது இருக்கும் தவளையை கருநிற பாம்பு வாயால் கவ்விவிடுகிறது. இதனை உணர்ந்து கொண்ட தவளை, பாம்பிடம் இருந்து தப்பிக்க விடா முயற்சி செய்கிறது.

2 நிமிடங்களுக்கு மேல் தொடர் முயற்சி செய்யும் தவளை ஒரு வழியாக பாம்பிடம் இருந்து தப்பித்து ஓடிவிடுகிறது. இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

உயிர்போகும் ஆபத்து வந்தால்கூட விடா முயற்சியுடன் செயல்பட்டால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதை தவளை உணர்த்தியிருப்பதாக இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.

வாழ்க்கையிலும் ஒரு போதும் பின்வாங்கிச் கூடாது என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்டுள்ளது. இதை சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Related articles

Recent articles

spot_img