கேரளாவில் செல்பி மோகம் மணமகன் பலி மணப்பெண் உயிர் ஊசல்..

Published:

கேரளா கோழிக்கோடு மாவட்டத்தில் குட்டியாடி அருகே இன்று புதுமணத் தம்பதிகள் செல்பி எடுக்கும்போது மணமக்கள்
ஏரியில் தவறி விழுந்ததில் மணமகன் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மணமகள் பலத்த காயமடைந்தார்.செல்பி மோகத்தால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது வருந்தத்தக்க விஷயமாகவே உள்ளது. 

கடந்த மார்ச் 14-ம் தேதி திருமணம் செய்துகொண்ட ரெஜிலாலும் அவரது மனைவி கனிகாவும் திங்களன்று கோழிக்கோடு மாவட்டத்தில் குட்டியாடி அருகே உள்ள சுற்றுலாத் தலத்துக்கு வந்து ஏரி முகப்பில் பொழுதைக் கழித்தனர். 

அப்போது இருவரும் செல்பி எடுத்துக்கொண்டிருந்தபோது தண்ணீர் வரத்து அதிகமாக இருந்த ஏரியில் திடீரென தவறி விழுந்தனர். கிராம மக்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  ஆனால்  மணமகன் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

 மணமகள் கனிகா ஏரியிலிருந்து மீட்டு மலபார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. பெருவணமுழி போலீசார் வழக்குப் பதிவு செய்து, உடலை மீட்டு விசாரணை நடத்தி வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!
IMG 20220404 WA0098 - 2026

Related articles

Recent articles

spot_img