இன்று பா.ஜ.க நிறுவன தினம்..

இன்று ஏப்6 பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தினத்தையொட்டி, இன்று முதல் 15 நாட்களுக்கு, சமூக நீதி இயக்கம் என்ற பெயரில் பாஜக சார்பில் சிறப்பு பிரசார இயக்கம் நடத்தப்பட உள்ளது. இதை, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்துள்ளார்.

modi - 2026

இன்று பா.ஜ.க வின் நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கட்சியின் பார்லிமென்ட் குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது,
புதன்கிழமை முதல், அடுத்த 15 நாட்களுக்கு சமூக நீதி இயக்கம் என்ற பெயரில் சிறப்பு பிரசார இயக்கம் நடத்தப்படும். இதில், பா.ஜ.க அரசு செயல்படுத்தியுள்ள பல திட்டங்கள் குறித்து எம்.பி.க்கள் மக்களிடையே விளக்க வேண்டும்.

இந்த மக்கள் சேவையில் அனைத்து எம்.பி.,க்களும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என அவர் பேசினார்.

கூட்டத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா பேசியதாவது,நாம் ராஜ்யசபாவில் முதல் முறையாக, 100 எம்.பி.,க்களை பெற்றுள்ளோம். வடகிழக்கு மாநிலங்களில் தனியாகவோ அல்லது கூட்டாகவே பா.ஜ.க அரசு அமைந்து உள்ளது. நாகாலாந்தில் முதல் முறையாக பா.ஜ.க வுக்கு பெண் எம்.பி., கிடைத்துள்ளார்.புதன் முதல், அடுத்த 15 நாட்களுக்கு சமூக நீதியை காப்பாற்றும் வகையில், பா.ஜ.க அரசுகள் செய்துள்ள சாதனைகளை மக்களிடையே தெரிவிக்க வேண்டும்.
சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, கொரோனா தடுப்பூசி இயக்கம் என, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையிலும் நாம் மேற்கொண்ட நலத் திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த இயக்கத்தின்போது, தங்களுடைய தொகுதியில் உள்ள நீர்நிலைகளை துாய்மைப்படுத்துவதிலும் அனைவரும் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

பா.ஜ.கபார்லிமென்ட் குழு கூட்டத்தில் பங்கேற்ற, 400 எம்.பி.,க்களுக்கும், இதுபோன்ற காவி நிற தொப்பி வழங்கப்பட்டது. அதில் கட்சியின் பெயரும், சின்னமான தாமரையும் பொறிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், உத்தர பிரதேசம் உட்பட நான்கு மாநிலங்களில் பா.ஜ.க வென்றது. தேர்தல் முடிவுகள் வெளியான பின் குஜராத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் காவி நிற தொப்பியை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கூட்டத்தில் அனைவருக்கும் சாக்லேட்
வழங்கப்பட்டது. அதன் உறையில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories