spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?UPSC, IES, ISS தேர்வு அறிவிப்பு! விபரங்கள் இதோ👇!

UPSC, IES, ISS தேர்வு அறிவிப்பு! விபரங்கள் இதோ👇!

- Advertisement -

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) இந்திய பொருளாதார சேவை (IES) மற்றும் இந்தியன் ஸ்டேட்டிக்ஸ் சர்வீஸ் தேர்வுக்கான (ISS) அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

IES மற்றும் ISS ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை upsc தனது அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது.

UPSC IES ISS தேர்வு 2022-க்கு (upsc ies exam date 2022) ஏப்ரல் 8 முதல் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

IES ISS தேர்வு 2022 (UPSC Indian Economic Service/Indian Statistical Service Exam 2022) இல் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 26 ஏப்ரல் 2022-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.

இந்த ஆணையம் 2022 ஐஇஎஸ் மற்றும் ஐஎஸ்எஸ் தேர்வுகளை ஜூன் 24 முதல் ஜூன் 26 வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் நடத்தும்.

இந்த ஆண்டு 53 பணியிடங்களுக்கான இந்த தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் இந்திய பொருளாதார சேவை தேர்வுக்கு (IES), பொருளாதாரம்/ பயன்பாட்டு பொருளாதாரம்/ வணிக பொருளாதாரம்/ பொருளாதார அளவீடு ஆகியவற்றில் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்திய புள்ளியியல் சேவைகள் (ISS) பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் புள்ளியியல், கணிதப் புள்ளியியல் அல்லது பயன்பாட்டு புள்ளியியல் ஆகியவற்றுடன் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது புள்ளியியல், கணிதப் புள்ளியியல் அல்லது பயன்பாட்டு புள்ளியியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

மேலும் இந்த பதவிகளுக்கு எழுத்துத்தேர்வு முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – ஏப்ரல் 26, 2022.
விண்ணப்பங்களை திரும்பப் பெறுவதற்கான தேதி – மே 4 முதல் 10, 2022.

அட்மிட் கார்டு வெளியாகும் தேதி – ஜூன் 13, 2022 (தற்காலிகமானது).
தேர்வு நடைபெறும் தேதி – ஜூன் 24, 2022.
UPSC IES, ISS தேர்வுகள் ஜூன் 24, 2022 இல் தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறும்.

இது குறித்த மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

முதலில் UPSC இணையதளத்திற்கு upsconline.nic.in செல்லவும்.

இணையதளத்திற்குச் சென்று”online apllication for various examination of upsc என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது ISS-க்கான indian statistical service Examination பகுதி 1 பதிவு இணைப்பையும் IESக்கான indian economic service Examination பகுதி 1 பதிவு இணைப்பையும் கிளிக் செய்யவும்.

இதற்குப் பிறகு, இங்கு கேட்கப்படும் பெயர், முகவரி, மின்னஞ்சல், பெற்றோரின் பெயர் போன்ற தகவல்களை நிரப்பி பதிவை முடிக்கவும்.

உங்கள் புகைப்படம், கையொப்பம் மற்றும் புகைப்பட அடையாள அட்டையைப் பதிவேற்றவும்

இந்த செயல்முறை முடிந்ததும், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.

பணம் செலுத்திய பிறகு, மையத்தைத் தேர்ந்தெடுத்து சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பத்தை வெற்றிகரமாக சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

இப்போது அதே வழியில் நீங்கள் பிரதான பக்கத்திற்குச் சென்று பகுதி 2-க்கு பதிவு செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 1, 2022 அன்று 21 வயதை அடைந்திருப்பதையும் 30 வயதுக்கு மிகாமல் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.

அரசு நிர்ணயித்த விதிமுறைகளின்படி ஒதுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வுகள் வழங்கப்படும்.

மேலும் விவரங்கள் மற்றும் தகவலுக்கு, விண்ணப்பதாரர்கள் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ UPSC IES, ISS 2022 அறிவிப்பைப் படிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe