mom son - 2026

போதையில் வந்த மகன்.. மிளகாய் பொடியை முகத்தில் தேய்த்த தாய்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
mom son - 2026

தெலுங்கானா மாநிலத்தில் மகன் கஞ்சா அடித்ததை தெரிந்து கொண்ட தாய் மகனுக்கு கொடுத்த கொடூர தண்டனை வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகின்றது.

தெலங்கானா மாநிலம் சூர்யபேட் மாவட்டத்தில் உள்ள கேடாட் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் கஞ்சா அடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளான்.

மகன் கஞ்சா அடித்தை தெரிந்து கொண்ட தாய் மகனை தண்டித்து திருத்தும் நோக்கில் அவனை கம்பத்தில் கட்டி வைத்து கதற கதற முகத்தில் மிளகாய் பொடியை பூசியுள்ளார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கஞ்சா போதையிலிருந்த மகனுக்கும், மகனது முகத்தில் மிளகாய் பொடியை பூசிய தாய்க்கும் அறிவுரை சொல்லி வந்தனர். பின்பு மகன் இனி கஞ்சா அடிக்கமாட்டேன் என கூறி மன்னிப்பு கேட்ட பின்பே தாய் மகனின் கட்டை அவிழ்த்து முகத்தில் தண்ணீர் ஊற்றி கழுவியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பல்வேறு கமெண்ட்களை பெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.