Asteroid - 2026

பூமியை நெருங்கும் பெரிய சிறுகோள்: நாசா தகவல்!

சற்றுமுன் அடடே... அப்படியா? உலகம்
Asteroid - 2026

பூமிக்கு இது மற்றொரு பயங்கரமான தருணமாக இருக்கும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பூமியை நோக்கி ஒரு சிறுகோள் நமது கிரகத்திற்கு ஆபத்தான முறையில் நெருங்கி வருகிறது என்ற திடுக்கிடும் உண்மையை நாசா வெளியிட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து பூமியைப் பல சிறுகோள்கள் கடப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். இருப்பினும், சில நெருங்கிய சிறுகோள் அழைப்புகளையும் பூமி தொடர்ந்து சந்தித்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாகப் பெரிய சிறுகோள்கள் எதுவும் கிரகத்தைத் தாக்கி எந்த அழிவையும் ஏற்படுத்தவில்லை.

பூமிக்கு எதிரான ஒரு சிறுகோள் தாக்குதல்
இருப்பினும், சமீபத்தில் பூமிக்கு எதிரான ஒரு சிறுகோள் தாக்குதல் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுகோள் 2022 EB5 (Asteroid 2022 EB5) என்ற சிறுகோள் சமீபத்தில் பூமியைத் தாக்கி சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அது மிகவும் சிறியதாக இருந்த காரணத்தினால் பெரியளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சிறுகோள் பூமியின் சுற்று வட்டத்திற்குள் நுழைத்து, கிரீன்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட கடற்கரையில் தரையிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இது சிறிய அளவு சிறுகோள் என்பதனாலும், இது கடற் பகுதிக்குள் தரையிறங்கியதாலும் பெரியளவு ஆபத்து எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

ஆனால், இப்போது ஒரு புதிய சிறுகோள் இன்று கிரகத்தை நெருங்கப் போகிறது மற்றும் இது நிலைமையை மோசமாக்கும் வகையில் மாற வாய்ப்புள்ளது என்றும், அது பூமிக்கு மிக அருகில் வரப் போகிறது என்றும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

earth - 2026

ஆம், இந்த சிறுகோள், 2022 GG2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பூமிக்கு 453,000 மைல்கள் அருகில் வரப்போகிறது.
பூமிக்கும் இந்த பெரிய சிறுகோள் பயணிக்கும் சுற்றுப்பாதைக்கும் மத்தியில் வெறும் 5 லட்சம் மைல்கள் தான் இருக்கிறது.

நமக்கு 453,000 மைல் தூரம் என்பது ஒரு பெரிய விஷயமாகத் தெரியாது. ஆனால், வானியல் அலகுகளின் அடிப்படையில், இது மிக மிகக் குறுகிய தூரம் என்கின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.

தெரியாதவர்களுக்கு, ஒரு வானியல் அலகு நீளத்தின் ஒரு அலகு ஆகும். இது முதன்மையாகச் சூரியக் குடும்பத்திற்குள் அல்லது மற்ற நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள தூரத்தை அளவிடப் பயன்படுகிறது.

வானியல் அலகுகளின் அடிப்படையில், இந்த சிறுகோள் பூமிக்கு மிக நெருக்கமான அணுகுமுறை வெறும் 0.00010408 au தொலைவில் இருக்கும். விண்வெளிப் பாறைகள் அதன் பாதையிலிருந்து விலகிச் சென்றால், சிறுகோள்களுடன் மோதும் பச்சத்தில், இது பூமிக்கு எதிரான சிறுகோள் தாக்குதலை ஏற்படுத்தக்கூடும் என்பதனால் விஞ்ஞானிகள் இந்த தூரத்தை நினைத்துக் கவலைப்படுகின்றனர்.

நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் கூற்றுப்படி, 2022 ஜிஜி2 என்ற சிறுகோள் 18 அடி அகலம் கொண்டது. இது பூமியின் வளிமண்டலத்தில் அழிக்கப்படுவதைத் தவிர்க்க போதுமானதாக உள்ளது மற்றும் அது மேற்பரப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு பெரியதாக உள்ளது.

எதிர்பாராத சூழ்நிலையில் பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டால் இது ஒரு ஆபத்தான நிகழ்வாக நிகழலாம் என்று கூறப்படுகிறது. முன்பே சொன்னது போல், இதன் பாதையில் ஏதேனும் சிறுகள் குறுக்கே வந்து, சிறுகோள் செல்லும் திசையைப் பூமி நோக்கி மாற்றிவிடப்பட்டால் இந்த அசம்பாவிதம் நிகழ வாய்ப்புள்ளது.

இது ஏற்படுத்தக்கூடிய சேதம் பெரும்பாலும் உள்ளூர் மயமாக்கப்படும் மற்றும் அது எந்த பூகம்பம் அல்லது சுனாமியையும் தூண்டாது என்று நாசா தெரிவித்துள்ளது.

இருப்பினும், இதன் தாக்கம் காற்றில் ஒரு அதிர்ச்சி அலையை உருவாக்கும், அது பெரிய தூரம் வரை கேட்கும் என்று நாசா கூறியுள்ளது. சுவாரஸ்யமாக, பூமிக்கு மிக நெருக்கமான அணுகுமுறை இந்த சிறுகோளின் பெரிஹெலியன் ஆகும்.

அதாவது இது பூமிக்கு மிக அருகில் அதன் சுற்றுப்பாதையில் இருந்து நகரத் தொடங்கும் முன். இந்த சிறுகோள் பூமி மற்றும் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைகளுக்கு இடையில் சூரியனைச் சுற்றி வருகிறது.

இந்த சிறுகோள் மற்றும் பூமியைச் சுற்றி வரும் பிற சிறுகோள்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நீங்கள் நாசாவின் சிறிய உடல் தரவுத்தள (Small Body Database) வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.

தற்போது, ​​கோள்களின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் அல்லது PDCO இந்த சிறுகோளைப் பூமியை நோக்கி தனது திசையை மாற்றுவதற்கு எந்தவிதமான திடீர் அசைவுகளையும் செய்யாமல் இருப்பதை உறுதிசெய்ய தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.