பழமையான டைனோசர் கால்! ஆராய்ச்சியில் தகவல்!

Dinosaur - 2026

மனித இனம் தோன்றுவதற்கு முன்பே பூமியில் வாழ்ந்த விலங்கினமான டைனோசர்கள், பூமியோடு மோதிய ஒரு சிறுகோள் தாக்கத்தின் விளைவாக அழிந்துவிட்டன” என்பதே குறிப்பிட்ட உண்மை கதையின் தொடக்கமாகும்!

நாம் வாழும் இதே பூமியில், ஒருகாலத்தில் டைனோசர்களும் நடமாடின, உயிர் வாழ்ந்தன என்பது நமக்கு தெளிவாக தெரிந்திருந்தாலும் கூட அவற்றைப் பற்றி நாம் இன்னும் அறியாத பல விஷயங்கள் உள்ளன என்பதே நிதர்சனம்.

ஒவ்வொரு நாளும், உலகின் ஏதோவொரு மூலையில், டைனோசர்களை பற்றி ஆராயும் ஏதோவொரு விஞ்ஞானிகள் குழு, டைனோசர்களைப் பற்றிய ஏதோவொரு புதிரின் ஒரு பகுதியைக் கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர்.

அந்த புதிர்கள், மில்லியன்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கம்பீரமான உயிரினங்களை பற்றிய பல விவரங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது.

இப்படியாக சமீபத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக, பூமிக்கடியில், இருட்டில் புதையுண்டு கிடந்த ஒரு டைனோசர் கால் புதைபடிவத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சப்பட்டுள்ளது.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்களின் புதைபடிவங்களை விட இது ஏன் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது என்றால் – ஒரு சிறுகோள் பூமி கிரகத்துடன் மோதி முழு உயிரினங்களையும் “ஒரு நாள்” கொன்றது அல்லவா? இந்த டைனோசரின் கால் “அந்த நாள்” உடன் தொடர்புடையது என்று கருதப்படுகிறது!

குறிப்பிட்ட புதைபடிவத்தின் நிலைமைகள் (conditions) விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தி உள்ளது மற்றும் இது குறிப்பிட்ட ‘சிறுகோள் மோதல்’ சம்பவத்தின் மேம்பட்ட ஆராய்ச்சிக்கு நிச்சயமாக உதவும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாகாணத்தில் உள்ள டானிஸ் புதைபடிவ தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளின் ஒரு பகுதியான இந்த டைனோசரின் கால், சுமார் 66 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதாவது 66 மில்லியன் ஆண்டுகள் என்றால், டைனோசர்களை அழித்த சிறுகோள், பூமி உடன் மோதிய காலத்தோடு கிட்டத்தட்ட ஒற்றுப்போகிறது.

இதுவரையிலாக குறிப்பிட்ட சிறுகோள் மோதல் நடந்து முடிந்து, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகான டைனோசர் எச்சங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; ஆனால் இது அப்படி இல்லை. இது குறிப்பிட்ட பேரழிவை ஏற்படுத்திய அதே நாளுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

எனவே தான் இந்த டைனோசர் கால் புதைபடிவத்தின் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஆழமான ஆராய்ச்சிகளுக்கான சாத்தியக்கூறுகள் நிரம்பியதாகவும் காணப்படுகிறது.

இதுபற்றி கருத்து தெரிவிக்கும் போது, டானிஸ் புதைபடிவ தளத்தில் நடக்கும் “தோண்டலுக்கு” தலைமை தாங்கும் மான்செஸ்டர் பல்கலைக்கழக பட்டதாரி மாணவர் ராபர்ட் டிபால்மா, “(குறிப்பிட்ட சிறுகோள் தாக்கத்தின் போது) நிமிடத்திற்கு நிமிடம் என்ன நடந்தது என்பதை சொல்லும் பல விவரங்களை இந்த தளத்தில் நாங்கள் பெற்றுள்ளோம்.

இது திரையில் ஒரு படம் ஓடுவதை போல உள்ளது. நீங்கள் ராக் காளமை (rock column) பார்க்கிறீர்கள், அங்குள்ள புதைபடிவங்களைப் பார்க்கிறீர்கள், அது உங்களை ‘அந்த நாளுக்கு’ திரும்ப கொண்டு செல்கிறது”. என்று கூறி உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories