திரையுலகை பெருமைப்படுத்தும் AK!

Published:

ajith 5 - 2026

தமிழ் திரையுலகில் ரஜினி, கமல் வரிசையில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் மற்ற துறைகளிலும் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார்.

அந்த வகையில் துப்பாக்கி சுடுதல், பைக் மற்றும் கார் ரேஸ் போன்றவற்றிலும் இவருக்கு ஆர்வம் அதிகம்.

ajith 7 - 2026

இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்று இவர் ஏராளமான பதக்கங்களை பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஆளில்லா விமானத்தை தயாரிப்பதிலும் கில்லாடியான இவரை சென்னை ஐஐடி கல்லூரி நிர்வாகம் தங்களுடைய மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டுகோள் வைத்தது.

ajith 6 - 2026

அதை ஏற்றுக்கொண்ட அஜித் அந்த மாணவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக செயல்பட்டார். அதன் பலனாக கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்சில் அஜித்தின் தக்ஷா குழு இரண்டாவது இடத்தை பெற்றது.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் போதும் இவர்கள் உருவாக்கிய ட்ரோன்கள் தான் கிருமி நீக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டது.

ajith 4 - 2026

இந்நிலையில் தற்போது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய பயணிகள் விமான போக்குவரத்துத் துறையின் சார்பில் ஆளில்லா விமானங்களை தயாரிக்க இந்த தக்ஷா குழு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!
ajith8 - 2026

இந்த விமானங்களை தயாரிப்பதற்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல நிறுவனங்கள் தேர்வாகி இருக்கிறது. அதில் ஒன்றாகத்தான் அஜித்தின் தக்ஷா குழுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது அந்த குழுவினருக்கு மட்டுமல்லாமல் தமிழ்த் திரையுலகிற்கு கிடைத்த பெருமையாகும்.

ajith3 - 2026

இந்த செய்தியை தற்போது அஜித் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். தற்போது அஜித் ஹைதராபாத்தில் வினோத் இயக்கும் தன்னுடைய அடுத்த பட ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img