விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி.. தரதரவென இழுத்து செல்லும் குரங்கு!

monkey - 2026

சீனாவில் 3 வயது சிறுமியை காட்டு குரங்கு ஒன்று தாக்கி இழுத்துக்கொண்டு செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குழந்தைகள் மீது காட்டு விலங்குகள் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றன. அந்த வகையில் சீனாவில் காட்டு குரங்கு ஒன்று சிறுமியை அடித்து இழுத்துச் செல்லும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் ஜோங்கிங் மாநகராட்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் சாலையில் நின்று சிறுமி விளையாடிக் கொண்டிருக்கிறார்.

அப்போது சிறுமியின் பின்னால் சத்தமில்லாமல் வரும் காட்டு குரங்கு ஒன்று ஒரே அடியாக சிறுமியை தாக்கி தள்ளுகிறது. மீண்டும் சிறுமியை ஒரு பொம்மையைப்போல இழுத்துச் செல்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர் துரிதமாக செயல்பட்டு குரங்கிடம் இருந்து சிறுமியை காப்பாற்றியுள்ளனர்.

இது குறித்து தெரிவித்த அந்த சிறுமியின் தாயார், ”நான் வீட்டுக்குள் சமைத்துக் கொண்டிருந்தேன். எனது மகள் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். உடனடியாக பக்கத்து வீட்டார் வந்து தகவலை தெரிவித்தனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
baby 1 - 2026

பின்னர் சிசிடிவியில் பார்த்தபோது இது மிகவும் கொடூரமான விஷயமாக இருந்தது. உடனடியாக நான் இது குறித்து போலீசாரிடமும், வன அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன்” என்றார்.

குரங்கு இழுத்துச் சென்றதில் பெரிய காயங்கள் இல்லை என்றாலும் சிறுமியின் முகத்திலும் கையில் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தெரிவித்த ஊர்மக்கள், ‘ஊருக்குள் குரங்குகள் தொல்லை அதிகமாக இருக்கிறது. குரங்குகள், வயதானவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தும். முதல்முறையாக குழந்தையை தாக்கியுள்ளது.

இது குறித்து வன அதிகாரிகளும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தனர். காட்டு குரங்குகள் குறித்து தெரிவித்த போலீசார், ‘ஊருக்கு அருகில் உள்ள மலையில் இருந்து குரங்குகள் ஊருக்குள் வருகின்றன.

வயதானவர்களை குறி வைத்து தாக்கும் குரங்குகள் இப்போது சிறுமியை தாக்கியுள்ளது. குரங்குகளை மீண்டும் மலைக்கு விரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றனர்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories