December 6, 2025, 9:15 AM
26.8 C
Chennai

பூமி தினம்: கூகுள் வெளியிட்ட அதிர்ச்சி டூடுல்!

Google 1 - 2025

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி ‘உலக பூமி தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உயிர் வாழ்வதற்கு ஆதாரமான பூமிப்பந்தில் வெப்பமயமாதல், இயற்கை சீற்றங்கள், பேரிடர்கள் போன்றவற்றால் ஏற்படும் மாற்றங்களும், அவற்றிலிருந்து மீள்வதற்கான உறுதிமொழிகளை கடைப்பிடிப்பதே பூமி தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

மைக்ரோ நொடிக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் சாட்டிலைட் யுகத்தில் பூமியின் தற்போதைய நிலையை அப்பட்டமாக காட்டுகிறது சாட்டிலைட் புகைப்படங்கள்.

ஆனால் பூமி தினத்தில் வெளியான புகைப்படங்கள் சமூக மற்றும் சூழல் ஆர்வலர்களின் மனதை கனக்க வைத்துள்ளது.

இன்றைய வெளியான கூகுள் டூடுலை கவனித்திருந்தால் இதனை எளிதில் புரிந்து கொள்ளலாம். வெப்ப மயமாதலிலிருந்து பூமியை காப்பாற்றுவதன் அவசியம் தொடர்பாக கூகுள் இன்று டூடுலை வெளியிட்டுள்ளது.

கூகுள் இணையத்தளத்தின் முகப்பு பக்கத்தில் உலகின் நான்கு வெவ்வேறு பகுதிகள் அடைந்துள்ள மாற்றத்தை உணர்த்தும் வகையில் ஜிஃப்-அனிமேஷன் உதவியுடன் சாட்டிலைட் புகைப்படங்களை டூடுலாக வெளியிட்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலை உச்சியில் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்த பனிப்பாறையின் அளவையும், 2020ஆம் ஆண்டு பனியின் அளவு குறைந்திருப்பதையும் கூகுள் டூடுல் மூலம் தெளிவாகிறது.

Google - 2025

அதேபோல் கிரீன்லாந்தில் செர் மர்சூக் பகுதியிலிருந்த பனிப்பாறையின் அளவில் 2000 ஆம் ஆண்டுக்கும், 2020 ஆம் ஆண்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மாற்றம், ஆஸ்திரேலியாவில் லிசார்ட் தீவிலிருந்து கிரேட் பாரியர் ரீஃப் எனப்படும் பொலிவிழந்த பவளப்பாறை தோற்றத்தையும் 2016 ஆம் ஆண்டுக்கும் 2020 ஆம் ஆண்டுக்கும் இடையே ஒப்பிட்டு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல் ஜெர்மனியின் எலன் பகுதியிலுள்ள ஹார்ட்ஸ் காடுகள் அழிந்து வருவதும் கூகுள் டூடுல் காட்டியுள்ளது. 1995 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடையே அந்த காட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அந்த டூடுல் வெளிக்காட்டுகிறது.

பூமியின் பொலிவிழந்த இந்த தோற்றம் சமூக ஆர்வலர்கள் மற்றும் சூழல் ஆர்வலர்களை கதிகலங்க வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories