ராஜபாளையத்தில் ஏப் 24இல் பி.ஏ.சி. ராமசாமிராஜா 128வது பிறந்தநாள் விழா ..

Published:

தமிழகத்தில் தலைசிறந்த தொழில்நிறுவனங்களில் ஒன்றான ராஜபாளையம் ராம்கோ குரூப் நிறுவனங்களின் ஸ்தாபகர் பி.ஏ.சி. ராமசாமிராஜாவின் 128வது பிறந்தநாள் விழா நாளை ஏப் 24இல் ராஜபாளையத்தில் கொண்டாடப்பட உள்ளது.

ராம்கோ நிறுவனத்தின் ஸ்தாபகர் பெருந்தகை ஸ்ரீமான் பி.ஏ.சி ராமசாமி ராஜா 128 வது பிறந்தநாள் விழா ஏப் 24 நடைபெற இருக்கிறது. ஏப் 24 விழாவில் பி.ஏ.சி. ராமசாமிராஜா நினைவாலயத்தில் காலை பி.ஏ.சி. ராமசாமிராஜா நினைவு இசைப்பள்ளி குழுவினரின் கீர்த்தனாஞ்சலியும் அதனை தொடர்ந்து புஷ்பாஞ்சலியும் நடைபெறும்.இதில் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர். வெங்கட்ராமராஜா கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துவார். விழாவில் ராம்கோ குழும குடும்பத்தினர் , இயக்குனர்கள், முக்கிய பிரமுகர்கள் வர்த்தகர்கள் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள்.

தொடர்ந்து சொக்கர் கோவிலில் பி.ஏ.சி. ராமசாமிராஜா உருவ படத்திற்கும், ஜோதிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தொடர் ஜோதி ஓட்டத்தை பி.ஆர்.வெங்கட்ராமராஜா தொடங்கி வைக்கிறார். தொடர் ஜோதி ஓட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி மத்திசேனை,சங்கரலிங்காபுரம் வழியாக துலுக்கப்பட்டியில் உள்ள ராம்கோ நகருக்கு சென்றடையும்.
மேலும் ராமமந்திரம் அருகில் உள்ள பி.ஏ.சி.ராமசாமிராஜா உருவ சிலைக்கு சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்வும் நடைபெறும்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

விழாவை முன்னிட்டு இன்றுஏப் 23, நாளை 24 ஆம் தேதி மாலை ராஜபாளையத்தில் இசைக்கச்சேரிகள் நடைபெற உள்ளன. ராஜபாளையம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண மண்டபம் பி.ஏ.சி.ராமசாமிராஜா அரங் கத்தில் ஏப் 23 இன்று மாலை 6.30க்கு ஸ்ரீமதிஇரஞ்சனி ,ஸ்ரீமதி காயத்ரி குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சியும் ஏப் 24 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30க்கு திரைப்பட பின்னணிப் பாடகர்கள் செந்தில்கணேஷ் ராஜலட்சுமி குழுவினரின் கிராமிய பல்சுவை இசை நிகழ்ச்சி நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை ராஜபாளையம் ராம்கோ குழும குடும்பத்தினர் செய்துள்ளனர்.

images 82 - 2026

Related articles

Recent articles

spot_img