இந்த நம்பர் கால்களை அட்டென்ட் செய்யாதீங்க.‌. SBI எச்சரிக்கை!

Hacker - 2026

மோசடி செய்பவர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கைக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

ஸ்டேட் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கைக் குறிப்பில், மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் போலியான லிங்க் மூலமாக ஆன்லைன் பாதுகாப்பை உடைப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

அசாம் மாநிலத்தின் சி.ஐ.டி காவல்துறையினர் வெளியிட்டிருந்த எச்சரிக்கையை ஸ்டேட் வங்கி ரீட்வீட் செய்திருந்தது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சி.ஐ.டி காவல்துறையினர் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரையும் இரண்டு செல்ஃபோன் எண்களில் இருந்து வரும் அழைப்புகளைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

இந்த இரண்டு எண்களில் இருந்து அசாம் மாநிலத்தின் பல்வேறு வாடிக்கையாளர்கள் அழைப்புகளைப் பெறுவதோடு, மோசடியில் தள்ளப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனினும், அசாம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருக்கும் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களும் புதிய எண்களில் இருந்து விடுக்கப்படும் ஃபோன் அழைப்புகளில் தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தின் சி.ஐ.டி காவல்துறையினர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு 91-8294710946, +91-7362951973 ஆகிய இரண்டு எண்களில் இருந்து ஃபோனில் அழைப்பு விடுக்கப்படுவதாகவும், KYC எண்ணை அப்டேட் செய்வதற்காக இந்த மோசடியாளர்கள் அனுப்பும் ஃபிஷிங் லிங்கை அழுத்தக் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் இது போன்ற ஃபிஷிங் லிங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். இந்த எண்களில் வரும் அழைப்புகளைப் பொருட்படுத்தாமல், அவற்றில் இருந்து அனுப்பப்படும் ஃபிஷிங் லிங்கை அழுத்த வேண்டாம். அவை ஸ்டேட் வங்கியோடு தொடர்புடையவை அல்ல’ எனக் கூறியுள்ளது.

பிறரை ஏமாற்றி போலியான இணைய லிங்களை அழுத்த வைப்பதன் மூலம், ஃபிஷிங் என்ற மோசடிக் குற்றம் அரங்கேற்றப்படுகிறது.

அதிகாரப்பூர்வ நிறுவனங்களைப் போல சைபர் கிரிமினல்களால் பெரும்பாலும் ஈமெயில்கள், எஸ்.எம்.எஸ்கள் முதலானவற்றில் தனிநபர்களைக் குறி வைத்து இந்த லிங்க் அனுப்பப்படுகிறது.

தற்போதைய ஸ்டேட் வங்கி மோசடிகளில், இந்த சைபர் கிரிமினல்கள் ஸ்டேட் வங்கி அதிகாரிகளைப் போல, ஃபிஷிங் லிங்கை அழுத்தி KYC விவரங்களைச் செலுத்துமாறு கூறி, தனி விவரங்களையும், வங்கி விவரங்களையும் திருடுகின்றனர்.

`கௌன் பனேகா க்ரோர்பதி’ குலுக்கல் போட்டியில் 25 லட்சம் ரூபாய் வென்றதாகக் கூறி, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து மெசேஜ்களின் மூலம் வாட்சாப் வாடிக்கையாளர்களைக் குறி வைக்கும் மோசடி செயலும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

பெரும்பாலான இந்த எண்கள் பாகிஸ்தானின் +92 என்ற தொடக்க எண்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பயனாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சமீபத்தில் தில்லி காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories