4 பெண்கள் தீக்குளிக்க முயற்சி -தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி அருகே பையர்நாயக்கன்பட்டி மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமார் ( 44). இவருக்கு அரசு சார்பில் 3 சென்ட் நிலம் பட்டா கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலத்தில் வீடு கட்டும் முயற்சியில் குமார் ஈடுபட்டு வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர் மற்றும் அவரது மகன் ஆகியோர், குமாரிடம் தகராறு செய்து வந்துள்ளனர். இந்த நிலம் தங்களுக்கே சொந்தம் என்றும், நிலத்தை காலி செய்யாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்த தாகவும் கூறப்படுகிறது.

இதனால் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வேதனை அடைந்தனர். இது பற்றி அரூர் டி.எஸ்.பி. மற்றும் போலீஸ் நிலையத் திலும் புகார் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.இங்கு குமார் தனது மனைவி விஜயலட்சுமி (38), தாய் ஜெயா(60), தங்கைகள் சுமதி (40), ஹரிணி (19) மற்றும் குழந் தைகளுடன் வந்திருந்தார். அப்போது விஜயலட்சுமி உள்பட 4 பெண்களும் திடீரென தாங்கள் கொண்டு வைத்திருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றனர். இதை பார்த்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே 4 பெண்களையும் தடுத்து நிறுத்தி, அவர்கள் உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

இதன்பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது தங்களது நிலத்தை அரசியல் கட்சி பிரமுகர் அபகரிக்க முயற்சி செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.இதன்பின்னர் தீக்குளிக்க முயற்சி செய்த 4 பெண்களையும் விசாரிப்பதற்காக தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

IMG 20220425 165651 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories