ஆசியாவிலேயே முதல் விமானம் எனும் பெருமையை பெற்ற இன்டிகோ..! எதற்கு தெரியுமா..?

indico flight - 2026

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ககன் நேவிகேஷன் சிஸ்டத்தை பயன்படுத்தி, தரையிறங்கிய ஆசியாவிலேயே முதல் விமானம் எனும் பெருமையை இன்டிகோ விமானம் பெற்றுள்ளது.

இந்தியாவில் மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட ககன் வழிகாட்டி அமைப்பைப் பயன்படுத்தி இன்டிகோ நிறுவனத்தின் ஏடிஆர் 72-600 ரக விமானம் அஜ்மீரில் உள்ள கிஷான்கார்க் விமானநிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

இந்த ககன் நேவிஷனை இந்திய விமான ஆணையம், மற்றும் இஸ்ரோ இணைந்து தயாரித்துள்ளனர். விமானம் தரையிறங்கும்போது, ஓடுபாதையில் இறங்குவது குறித்து தேவையான வழிகாட்டல்களை ககன் நேவிகேஷன் வழங்கும், குறிப்பாக சிறிய விமானநிலையங்களுக்கு இது பொருந்தும்.

இன்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜாய் தத்தா கூறுகையில் ” இந்திய விமானப் போக்குவரத்துறையில் இன்று மைல்கல். ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ககன் ஜிபிஎஸ் நேவிகேஷனைப் பயன்படுத்தி இன்டிகோ விமானம் தரையிறங்கியது.

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நேவிகேஷனைப் பயன்படுத்தி விமானத்தை தரையிறங்கிய 3-வது நாடு இந்தியா. இதற்கு முன் அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் மட்டுமே இதைச் செய்துள்ளன.

சிவில்விமானப் போக்குவரத்தில் ககன் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். விமானங்களை நவீனப்படுத்துதல், விமானத் தாமதத்தைத் தவிர்த்தல், எரிபொருள்சிக்கனம், பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு ககன் நேவிகேஷன் உதவியாக இருக்கும்.

டிஜிசிஏ, இஸ்ரோ, இந்திய விமானக் கட்டுப்பாட்டு ஆணையம் ஆகியவற்றுக்கு நன்றி, இந்த வரலாற்று முக்கியத்துவத்தில் இன்டிகோ நிறுவனமும் இணைந்துள்ளது”எ னத் தெரிவித்தார்

2021ம் ஆண்டு ஜூலை 31ம் தேதிக்குப்பின் இந்தியாவில் பதிவு செய்யப்படும் விமானங்களில் ககன் நேவிகேஷன் பொருத்துவது கட்டாயம் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கககன் நேவிகேஷன் செயற்கைக்கோள் அடிப்படையிலான முறையில் இயங்குகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories