திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனப்பகுதியை ஒட்டிய விவசாயநிலங்களை பாழ்படுத்தி வரும் யானைகளை கட்டுப்படுத்த கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
கன்னிவாடி வனப்பகுதியில் யானை நடமாட்டத்தால் விவசாயிகள் சுற்று கிராமத்தினர் பெரும் பாதிப்பினை சந்தித்தனர்.இதை கட்டுப்படுத்த விவசாய சங்கத்தினர் போராட்டம் அறிவித்தனர். இதை தொடர்ந்து யானைகளை கட்டுப்படுத்த டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து கலீம் என்ற கும்கி வனத்துறையினரால் நேற்று அழைத்து வரப்பட்டது.
கன்னிவாடி வனச்சரக பகுதியில் இருநாட்களாக 30 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் யானை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஓரிரு நாட்களில் வனத்துறை சிறப்புக் குழுவினர் கும்கி யானைகள் மூலம் அடர் வனப் பகுதிக்குள் யானைகளை அனுப்பும் பணியில் ஈடுபடுவர் என வனத்துறை யினர் விவசாயிகளிடம் தெரிவித்தனர்.
யானைகள் விவசாய நிலங்கள் குடியிருப்புக்கு வருவதை தடுக்க இந்தாண்டு 120 கி.மீ. துாரத்திற்கு அகழியும் 50 கி.மீ. துாரத்திற்கு சோலார் மின் வேலியும் அமைக்க அரசு முடிவுசெய்துள்ளது .
