சென்னை: புது தில்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆகப் பதவியேற்கவுள்ள அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார். இன்று அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், திமுக சார்பாக நான் மனப்பூர்வமான வாழ்த்துகளை உங்களுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி, ஜனநாயகத்தின் மீதும், தேர்தல் நடைமுறைகள் மீதும் கிட்டிய வெற்றி. இந்த வெற்றி, ஜனநாயகத்தின் மீதும் மதச்சார்பற்ற தன்மையின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. மத்திய அரசு மக்களின் மன நிலை அறிந்து, அனைத்து உதவிகளையும் உங்கள் அரசுக்குச் செய்யும் என்பது உறுதி என்று அந்த வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
வெற்றி பெற்ற கேஜ்ரிவாலுக்கு கருணாநிதி வாழ்த்து
Popular Categories



